Oct 3, 2014

News


திருப்பூரில் வழிப்பட்டு தலங்களில் அண்ணா தி.மு.க.வினர் பிரார்த்தனை








திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் பொதுசெயலாளர் ஜெயலலிதா மீண்டு வர வேண்டி வழிபாட்டு தலங்களில் சர்வ மத பிராத்தனை நடந்தது.
அண்ணா தி.மு.க.பொதுசெயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்கும்போது எல்லாம் திருப்பூர் மாவட்டத்திற்கு தனி கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக ரெயில்வே மேம்பாலம், குமரன் மகளிர் கல்லுரி, புதிய பஸ் நிலையம், 103 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வாளகம், இ.எஸ்.ஐ.மருத்துவமனை, மாநகராட்சிக்கு 330 கோடியில் 60 வது வார்டுகளுக்கும் சம நிலையில் வளர்ச்சி பணிகள், தினசரி குடிநீர் வழங்க ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. இது தவிர பள்ளிகூடங்களை தரம் உயர்த்துவது, பள்ளி குழந்தைகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது என்பது உள்ளிட்ட வைகலும் சிறப்பாக செய்து கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் கர்நாடக தனி நீதி மன்றம் அவருக்கு தவரான தீர்ப்பு வழங்கியுள்ளதால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது அவருக்கு எதிரான தீர்ப்பு என்று மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கு வழங்கப்பட்ட அநீதி என்று அவர் மீண்டு வர வேண்டி தமிழகம் முழுவதும் மக்கள் உண்ணாவிரதம், மனித சங்கிலி போராட்டம், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி அறவழியில் போராடி வருகின்றனர்.
திருப்பூர் ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், அவினாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.தூய பவுல் தேவாலயம், எஸ்.ஏ.பி.தியேட்டர் அருகில் உள்ள இஸ்லாமியர்கள் மசூதி ஆகியவற்றில் மாநகர மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலளார் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில், மகளிர் அணி செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், வசகு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான் ஆகியோர் முன்னிலையில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீண்டு வர வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த மூன்று நிகழ்சிகளிலும்  நிர்வாகிகள் கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், ஸ்டீபன்ராஜ், அட்லஸ் லோகநாதன்,உஷா ரவிக்குமார், கலைமகள் கோபால்சாமி, மாவட்ட பிரதிநிதி ரஞ்சித்ரத்தினம், யுவராஜ் சரவணன், கவுன்சிலர்கள் கணேஷ், சேகர்,ஈஸ்வரன், ஆகியோர்களும், சொர்க்கம் நீதிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக சி.எஸ்.ஐ.தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரத்தனியில் பாதிரியார் விஜயன், செயலாளர் ஜெபரூபன் ஜான்சன்,  பொருளாளர் ஜான் சந்திரராஜ், கமிட்டி உறுப்பினர் ஜெயராஜ் உள்ளிட்ட ஏராளமான அண்ணா தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.மேலும் திருப்பூர் ஏற்றுமதி இரண்டாம் நிலை பனியன் வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கம், பிரிண்டிங் மற்றும் கம்பக்டிங் சங்கம் ஆகியவை சார்பிலும் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டமும் நடந்தது.  
பின்னர் 'மக்கள் முதல்வர் ' ஜெயலலிதா மீண்டு வருவார் அம்மா என்ற நோட்டீசை மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான்,ஆகியோர் தலைமையில் அண்ணா தி.மு.க., வினர் பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.  

முள் செடியில் அமர்ந்து மௌன விரதம்



திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மண்ணரை தம்பி தோட்டத்தில் உள்ள வேப்பமர கருப்பணசாமி கோவிலில் அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டு வர வேண்டி பூசாரி சுப்பிரமணியம் காலை 8 மணி முதல்,மாலை 5 மணி வரை முள் செடியில் அமர்ந்து மௌன விரதம் இருந்தார். அவருடன் 32வது வார்டு கிளை செயலாளர்  பிரிண்ட் பீல்டு தம்பி என்கிற சுப்பிரமணியம், நகர எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் மூகாம்பிகை தங்கவேல்,முன்னாள் கவுன்சிலர் உமா தேவி, வி.எஸ்.பிரகாஷ், தங்கராஜ், குமார், சோமு,முத்துசாமி, மூர்த்தி, வெங்கடாசலம், நாராயணசாமி, வடிவேல் உள்பட பலரம் இருந்தனர். 

மதுரை ஐராவதநல்லூர் 55 வட்டத்தில் ஜெயலலிதா அவர்களுக்கு பொய்யான தீர்ப்பை வழங்கியதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்

மதுரை ஐராவதநல்லூர் 55 வட்டத்தில் ஜெயலலிதா அவர்களுக்கு பொய்யான தீர்ப்பை வழங்கியதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டம்  ஊராட்சி கிளை செயலாளர் A . ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது, இந்த  உண்ணாவிரத போராட்டத்தில் ஊரக செயலாளர் பொன்.சதுரகிரி , அவை தலைவர் ஸ்ரீனிவாசன் பேரவை குழு தலைவர் எழில் பாண்டி , அம்மா பேரவை செயலாளர் பிள்ளையார் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்  



ஜெ. கைதுக்கு எதிர்ப்பு: புதுவையில் நாளை "பந்த்" நடத்த அதிமுக அழைப்பு! மாநில செயலர் அதிருப்தி!!

ஜெ. கைதுக்கு எதிர்ப்பு: புதுவையில் நாளை

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் நாளை அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக மாநில செயலர் புருஷோத்தமனோ தமக்கு தெரியாமல் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அதிருப்தி தெரிவித்துள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் தண்டனை பெற்று, கைது செய்யப்பட்ட ஜெயலலிதா, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு 6-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புதுச்சேரியில் பந்த் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது. புதுச்சேரியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக நகர்ப்புற செயலர் டி.ரவீந்திரன், இந்தப் போராட்டத்துக்கான அழைப்பை விடுத்தார். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனாம் என அனைத்துப் பகுதிகளிலும் பந்த் நடத்தப்படுகிறது. இந்த செய்தியாளர் சந்திப்பின்போது புதுச்சேரி சட்டசபை அதிமுக துணைத் தலைவர் அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் ஓம்சக்தி சேகர், எல்.பெரியசாமி, பாஸ்கர் ஆகியோரும் உடன் இருந்தனர். மாநில செயலர் அதிருப்தி இதனிடையே புதுச்சேரி மாநில அதிமுக செயலர் புருஷோத்தமனோ, தமக்கு இந்த முழு அடைப்புப் போராட்டம் பற்றி எதுவுமே தெரியாது என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் புதுச்சேரி அதிமுகவில் கமுக்கமாக இருந்து வந்த உட்கட்சி பூசல் வெடிக்கத் தொடங்கியுள்ளது. புருஷோத்தமனின் இந்த அதிருப்தியால் நாளைய முழு அடைப்புப் போராட்டம் வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக உண்ணாவிரதம்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விரைவில் விடுதலை பெற வேண்டும் என வலியுறுத்தி சைதாப்பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜி. செந்தமிழன் தலைமையில் அதிமுக வினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
.

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா விரைவில் விடுதலை பெற வேண்டும் என வலியுறுத்தி சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தின் முன்பாக ஜி. செந்தமிழன் எம்எல்ஏ தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் சி. பொன்னையன் வாரியத் தலைவர்கள் ஆதிராஜாராம், சி.ஆர். சரஸ்வதி அதிமுக ஓட்டுநர் அணிச் செயலாளர் கமலக்கண்ணன், தலைமைக் கழக பேச்சாளர்கள் ஜெய கோவிந்தன், நிர்மலா பெரியசாமி, தீக்கனல் லட்சுமணன், காவேரி, தஞ்சை சங்கர், கடியாப்பட்டி கிருஷ்ணன், சிந்தை ஆறுமுகம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
சைதை பகுதிச்செயலாளர் என்.எஸ். மோகன், தொகுதி செயலாளர் மனோகரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் என்.கே. வத்சலா மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் ஆ. பழனி மற்றும் ஞானமுத்து, சைதை சாரதி, பேபி ராமகிருஷ்ணன், வீரராகவன், நரேஷ், கபீர், குமரவேல், புதுவை நடேசன் உள்ளிட்டோரும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
அதிமுக கவுன்சிலர்கள் ஆர். சங்கர், நா. பாஸ்கர், வட்ட செயலாளர்கள் எஸ். வீரமணி, என்.எஸ். குட்டி, மற்றும் ஏ. பாஸ்கர், சேது ராஜன், ஏ.வி.கே. ராஜ், ஈகை சீனு, ஹரி ஜெயபால், அறிவழகன், கிண்டி ராமு, இருதய தாஸ், ஷேக் அலி, வெங்கடேஷன், விஜி, வீரய்யன் உட்பட மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகளும் ஏராளமான மகளிரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக காரைக்காலில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்

காரைக்காலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்ததையொட்டி அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் வேளையில், புதுவை மாநில அதிமுகவினர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காரைக்காலில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்து நிலையம் அருகே நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் எஸ்.பி.கருப்பையா தலைமை வகித்தார். மாவட்ட செயலர் எம்.வி.ஓமலிங்கம் முன்னிலையில், புதுவை மாநில அதிமுக செயலரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பெ.புருஷோத்தமன் போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார்.
குற்றம் செய்யாத ஜெயலலிதாவுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஜாமீன் மறுப்பு தெரிவிப்பதும் சட்ட நெறிமுறைகளுக்கு புறம்பானது எனவும், அவர் விடுதலை செய்யப்படவேண்டும். புதுவை மாநில அதிமுக அவருக்கு எப்போதும் துணை நிற்குமென கட்சியினர் பேசினர். மேலும்  கட்சியினர், காவிரித் தண்ணீரை பெற்றுத்தந்ததற்காக கர்நாடக அரசு ஜெயலலிதாவை பழிவாங்குவதாகப் பேசினர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்களவை முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் மு.ராமதாஸ், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் வி.கே.கணபதி, வி.எம்.சி.வி.கணபதி மற்றும் அதிமுக மாவட்ட பொருளாளர் எச்.எம்.ஏ.காதர், நகர செயலர் ஜி.வி.ஜெயபால், துணை செயலர் சாகுல்ஹமீது, ஜீவானந்தம் உள்ளிட்ட சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.

எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் உண்ணாவிரதம்

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுவிக்க வலியுறுத்தி, சென்னை எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில், நாளை உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில், அ.தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்கள் கலந்து கொள்கின்றனர். சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள, எம்.ஜி.ஆர்., நினைவிடம் முன், அ.தி.மு.க., சார்பில், நாளை நடக்க உள்ள போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் அதிமுக.வினர் 5–வது நாளாக உண்ணாவிரதம்



திருப்பூரில் அதிமுக.வினர் 5–வது நாளாக உண்ணாவிரதம்

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., மற்றும் மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பை கண்டித்து திருப்பூர் சி.டி.சி.,பஸ் ஸ்டாப் அருகில் 5–வது நாளாக ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற உண்ணாவிரதம் நடந்தது.
திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளரும், திருப்பூர் துணை மேயருமான சு.குணசேகரன் தலைமை தாங்கினார். வடக்கு தொகுதி செயலாளர் ஜான், அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம். கண்ணப்பன், தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஸ்டீபன்ராஜ் , எஸ்.எம்.இசாக், அகமது பைசல் கவுன்சிலர்கள் நஜ்முதீன், செல்வம், புலவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவரணி செயலாளர் ,அன்பகம் திருப்பதி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், பி.கே.முத்து, தங்கமுத்து,
ஒன்றிய செயலாளர் கே.என். விஜயகுமார், நல்லூர் நகர செயலாளர் முத்துசாமி, பட்டுலிங்கம், கருணாகரன், கண்ணபிரான், சடையப்பன், சாகுல் அமீது, அப்பாஸ், சாகுல் அமீது, முகமது ஜக்கிரியா, கேபிள் ரபிதீன்,சையது அலி, நூர் முகமது, சுலைமான், ஷேக் முகமது, ஜபருல்லா, பிலால், மாலிக், காதர்பேட்டை பாஷா, முகம யூனுஸ், சாதிக் பாட்ஷா, முகமது இசாக், முபாரக், அபுதாகிர், சோட்டான், அமானுல்லா, முகமது அலி, அபுதாகிர், ஆட்டோ ஷாஜகான், சுலைமான், அனிபா, ரகமதுல்லா, அஷரப் அலி, மாபுஜான், இதயதுல்லா, எஸ்.கே.மைதீன், ஜாகீர் உசேன், இஸ்மாயில், அக்பர் அலி, பாபு, சவுகத் அலி, வக்கீல் சையது இப்ராகிம்,முஜி, முகமது அலி, ஜமீல், குஞ்சான், மைதீன், மும்தாஜ், ரிகானா பானு, பல்கிஸ், ரகமத் நிஷா, கையர் நிஷா, வாகிதா, வகருன்னிசா, சம்சாத், ரிஸ்வானா, கதீஜா, பாத்திமா, ஜெகரா, அஸ்மா, ஜமீலா, ஆபிதா, தசவி,சுபைதா, சபியா, பரிதா, காத்த்தூன் பீவி,அமீனா பானு, கவுன்சிலர்கள்கணேஷ், ஈஸ்வரன், சத்யா, கீதா, ரங்கசாமி, கலைமகள் கோபால்சாமி, கனகராஜ், செந்தில், சிதம்பரம், சி.டி.சி. பொன்னுசாமி, ராஜேஷ் கண்ணா, வி.எம்.கோகுல், யுவராஜ் சரவணன், ரத்தினகுமார், தனபால், தாமோதரன், டி.ஆர்.சந்திரன், ராஜகோபால், பாசறை கநாதன், ஷாஜகான், ராஜகோபால், பி.எஸ்.டி.செல்வம், நீதிராஜன், ஜே.கே.கந்தசாமி, சோமசுந்தரம், சு.லோகநாதன், பரமராஜன், கோமதி, அன்னபூரணி, மல்லிகா, ராஜம்மாள், சக்தியக்கா, வசந்தி, லீலா,ஈஸ்வரி, சாந்தி, மீனா,பழனாள் , வீராத்தாள், ராஜா முகமது,
பார்வார்டு பிளாக் ராஜசேகர், தீரன் சின்னமலை பேரவை பொது செயலாளர் கொங்கு ராஜாமணி, காயிதே மில்லத் யூனியன் லீக் மாவட்ட தலைவர் ஷாஜகான், டேபிள் பிரிண்டிங் அசோசியேசன் தஸ்தகிர், ஆர். தேவராஜ், பனியன் விஸ்வநாதன், தலைமை கழக பேச்சாளர்கள் மோட்டார் பாலு, பாரதிப்பிரியன், சாரதா, சாந்தி, செல்லமுத்து, மாணவரணி பார்த்திபன், முகவை கண்ணன், எரியீட்டி சேகர், உத்திராபதி, பேபி , பொறி பாலு, சுலைமான், பெரியசாமி, சுகுமார், ஆண்டவர் பழனிசாமி, வே.அ.கண்ணப்பன், குப்புசாமி, ஆட்டோ பால்ராஜ், வாளிபாளையம் ரவிக்குமார், மணிகண்டன், மாப்பிள்ளை விஜி, தங்கவிலாஸ் சுப்பிரமணி, அப்புக்குட்டி, தண்டபாணி, ஆட்டோ விஸ்வநாதன், பால்ராஜ், டூம்லைத் செந்தில், பூக்கடை பிரகாஷ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜெ. தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த அண்ணாதுரை கார் டிரைவர் மரணம்

ஜெ. தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த அண்ணாதுரை கார் டிரைவர் மரணம்



திருச்சி 
சோமரசம்பேட்டை அருகே உள்ள அரியாவூர் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவி (84). இவர் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாத்துரையின் கார் டிரைவராக பணியாற்றியவராகும். 1968ம் ஆண்டு வரை அண்ணாத்துரையிடம் பணியாற்றி விட்டு அவரின் மறைவுக்கு பிறகு அரசு விரைவு பஸ் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இதற்கிடையே பணி காலத்தில் தொழிற்சங்க தலைவராகவும் இருந்து அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்துள்ளார். தொடர்ந்து அ.தி.மு.க.வில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வந்தார். பணி ஓய்வுக்கு பிறகு வீட்டில் இருந்து வந்த அவருக்கு ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையும், அவருக்கு ஜாமீன் கிடைக்காததும் அவருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுத்த நாள் முதல் தனது வீட்டிலேயே உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதனால் அவரது உடல் நிலை கடந்த 2 நாட்களாக மிகவும் மோசமானது. நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சஞ்சீவியின் உயிர் பிரிந்தது. இதனை தொடர்ந்து அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். சஞ்சீவிக்கு பஞ்சவர்ணம் (70) என்ற மனைவியும், கலையரசி (45) என்ற மகளும் உள்ளனர்.

புதுச்சேரியில் நாளை முழு அடைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி புதுச்சேரியில் நாளை (சனிக்கிழமை) காலை முதல் மாலை வரை 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
.

இது தொடர்பாக புதுச்சேரி அதிமுகவின் நகர்புற செயலாளர் டி. ரவீந்திரன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இந்த பந்த் போராட்டம் தொடர்பாக கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றார்.

அவர் மேலும் கூறுகையில், எங்கள் தலைவி மிக விரைவிலேயே சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் அதற்காக புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் பந்த் நடைபெறும் என்றார். இந்த பேட்டியின் போது அதிமுக சட்டமன்ற கட்சியின் துணைத் தலைவர் அன்பழகன், எம்எல்ஏக்கள் ஓம்சக்தி சேகர், எல். பெரியசாமி, ஏ. பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிமுகவினர் தலைவர்களையெல்லாம் மேடை ஏற்றி இருக்கிறது அம்மா வின் சிறைவாசம் !!!!


முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை கண்டித்து திருப்பரங்குன்றம் பகுதியில்  அதிமுகவினர் தலைவர்களையெல்லாம் மீண்டும் மேடை ஏற்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்