Jun 5, 2020

திருச்சி ஊரடங்கு உத்தரவு தொடங்கிய நாள் முதல் தொடர்ச்சியாக மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிவரும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

திருச்சி ஜூன் 05

திருச்சியில் மீண்டும் வாழ்வாதாரத்தை துவக்கியுள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்யை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.






கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, எடுக்கப்படும் நடவடிக்கைகளால், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதித்துள்ள நிலையில் மீண்டும் துவங்கியுள்ள அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் திருச்சி, காந்தி மார்க்கெட், பழைய பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில், கிழக்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, மலைக்கோட்டை, பாலக்கரை, மற்றும் மாநகர பகுதியில் ஆட்டோக்களை இயக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள்  தொகுப்பினை, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

ஆட்டோ ஓட்டுனர்களின் சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு, சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்ட நாற்காலிகளில் அமர வைக்கப்பட்டு, பொருட்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக, ஓட்டுனர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி,  முகக்கவசம் வழங்கப்பட்டு, சமூக இடைவெளி, உடல் மற்றும் சுற்றுப்புறத்தூய்மை குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அமைச்சர் வெல்லமண்டி நடராஐன் அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக பகுதி கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

திருச்சி தீயணைப்பு துறையினர் துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் பேட்டி

தொடர்ச்சியாக மக்களை பாதுகாக்கும் மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர்
துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் பேட்டி

திருச்சி தீயணைப்புத்துறை துணை மண்டல இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் கூறுகையில் ஜீவராசிகளுக்கும் நாங்கள் மனிதநேயத்துடன் உணவு அளித்து வருகிறோம் கொரோனா தொற்று ஏற்பட்ட காலங்கள் முதல் தீயணைப்புத்துறையினர் எத்தனையோ மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.



 அதில் சிலர் இறந்தும் உள்ளனர் மேலும் உயிரிழந்த நிலையில் உள்ள பிணங்களை மீட்கும் பொழுது கிணறுகளில் விஷவாயு கசிவு களில் மீட்பு பணியில் ஈடுபடும் போது எங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிந்துதான் நாங்கள் எங்கள் உயிரையும் பெரிதாக கருதாமல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம் மேலும் எங்களிடையே மீட்பு பணிகளை செய்தியாக வெளியிடும் பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.



 மேலும்தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திர பாபு அவர்கள் வழிகாட்டுதல்படி பள்ளி மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஓவியப்போட்டி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.  இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு தமிழகத்தில் முதல் முறையாக காணொளி காட்சி மூலம் தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திரபாபு பரிசுகளையும் பாராட்டுதல்களையும் வழங்கி ஊக்கப்படுத்தினார் இந்த ஓவிய போட்டிகளில் பல நாட்களாய் வீட்டில் முடங்கிக் கிடந்த மாணவ மாணவியர்களின் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக அமைந்தது திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மத்திய மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.