Sep 17, 2014

காட்டு யானை, எருமை தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி



காட்டு யானை, எருமை தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், நெருப்புக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ், கிருஷ்ணகிரி மாவட்டம், சானமாவு காப்புக் காட்டுக்கு அருகே ஆந்திர மாநிலம், மிட்டாமீடிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்டரெட்டி ஆகியோர் காட்டு யானைகள் தாக்கியும், கோவை மாவட்டம், வால்பாறை வட்டம், அய்யர்பாடி தேயிலைத் தோட்டம் அருகே காட்டெருமை தாக்கியதில் சோமசுந்தரம் என்பவரும் உயிரிழந்தனர். இந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு வனத் துறை மூலம் தலா ரூ.3 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.