Mar 3, 2015

பல்லடம் அடுத்துள்ள சித்தம்பலம் நவக்கிரக கோட்டை கோவிலில்





மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நீடூழி வாழ வேண்டி அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் சிறப்பு யாகம், அபிஷேக பூஜை சங்கு பூஜை மற்றும் விளக்கு பூஜை நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில்  பல்லடம் கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ.,மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம்,ஒன்றியகுழு தலைவர் ஆறுமுகம்,  பொங்கலூர் ஒன்றிய செயலாளர் சிவாச்சலம், ஒன்றிய துணை செயலாளர் சித்துராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் சில்வர் வெங்கடாசலம், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஜோதிமணி, ஊராட்சி மன்ற தலைவர் அப்புசாமி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.