Nov 11, 2014

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீண்டு வந்தமைக்காக நேர்த்திக்கடன் செலுத்தும் வகையிலும், ஜெயலலிதா மீண்டும் தமிழக மதல்வராக வேண்டியும், எம்.எஸ்., நகரில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள், நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட செயலாளரும்,வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் எம்.மணி, எம்.கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், ஸ்டீபன் ராஜ் மற்றும் முருகசாமி, கலைமகள் கோபால்சாமி,கணேஷ், கனகராஜ், ரங்கசாமி, விஜயகுமார், சபரிஷ்வரன், அமுதா வேலுமணி உள்ளிட்ட கவுன்சிலர்கள்  ரத்தினகுமார், பாபு, யுவராஜ் சரவணன், அசோக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் அனைவருக்கும் அன்னதானம் நடந்தது.

திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் பரிவார மூர்த்திகள் ஆலயங்கள் அமைக்கப்பட்டு வருகின்ற டிசம்பர் 1-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது

இதையொட்டி பரிவார மூர்த்திகளுக்கு ஜலாதி வாசம் செய்யும் நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், ஹயக்கிரீவர், தன்வந்திரி மற்றும் 7 ஆழ்வார்கள் உள்ளிட்ட சாமி சிலைகள் தண்ணீர் தொட்டியில் விடப்பட்டு ஜலாதி வாசம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், நகரமைப்பு குழுதலைவர் அன்பகம் திருப்பதி,கவுன்சிலர் கண்ணப்பன்,  கூட்டுறவு சங்க தலைவர்கள் எம்.மணி,மார்க்கெட் சக்திவேல்,  அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியம், திருப்பணி குழுவினர் கிளாசிக் சிவராமன், டாக்டர் தங்கவேலு, சவுமீஸ் நடராசன், கிரீட்டிங்க்ஸ் ராஜேந்திரன், செயல் அலுவலர் சிவகாமசூரியன், உதவி ஆணையர் ஆனந்த், தலைமை குருக்கள் கோவிந்தராஜ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீண்டு வந்தமைக்காக நேர்த்திக்கடன் செலுத்தும் வகையிலும்

 மீண்டும் அவர் தமிழக முதல்வராக பொறுபேற்க வேண்டியும், காங்கயம் அருகில் உள்ள சிவன்மலை முருகன் கோவிலில் மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில், காங்கயம் எம்.எல்.ஏ., என்.எஸ்.என்.நடராஜன், மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன், தொழிற்சங்க செயலாளர் எம்கண்ணப்பன் ஆகியோர் தங்கத்தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தனர். காங்கயம்  நகர் மன்றத்தலைவர் வெங்கு என்கிற மணிமாறன், மாநகர நிர்வாகிகள் ஜ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, மார்க்கெட் சக்திவேல், மண்டலத்தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், கண்ணபிரான், சடையப்பன், கலைமகள் கோபால்சாமி உள்ளிட்ட கவுன்சிலர்கள் ஆகியோர் உள்பட் பலர் கலந்து கொண்டனர். 

தமிழக மக்கள் சுகாதாரமாக வாழ ரூ.8 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிஅரசு மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைகளும் பெற வழி வகை செய்தவர் ஜெயலலிதா என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கூறினார்.

தமிழக அரசின் சுகாதார துறை மற்றும் திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில், திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு  மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எம்.சண்முகம், திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், ரோட்டரி சங்க தலைவர் ரத்தினசாமி ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.விழாவில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துணவு வழங்கி பேசியதாவது:-
வடக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துணவு வழங்கும் திட்டத்தை திருப்பூரில்  வைத்திருக்கிறார்கள். இது ஒரு முன் மாதிரியான திட்டமாகும். இந்த திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும்  துவக்கப்படும்.மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தன்னுடைய ஆட்சிக்காலத்தில்தான், தமிழக மக்கள் சுகாதாரமாக வாழ வேண்டும் என்பதற்காக சுகாதார திட்டங்களுக்காக ரூ.8 ஆயிரம் கோடி  நிதி ஒதுக்கி, அரசு மருத்துவமனைகளிலே அனைத்து சிகிச்சைகளும் கிடைக்க வழிவகை செய்துள்ளார்.காச நோய் தொற்று நோய் அல்ல.உரிய சிகிச்சைகளை மேற்கொண்டால் அந்த நோய் குணமாகும். 
நோயாளிகள் நல்ல சத்துணவு சாப்பிட வேண்டும்,பாதுகாப்பாக  இருக்க வேண்டும் என்பதற்காக தான் இன்றைக்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் சுகாதரத்துக்காக பல்வேறு மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதனுடன் ஒரு வருடம் தொடர்ச்சியாக ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசின் மூலமாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட 400 பேர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.மேலும் சுகாதார நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில்,இணை இயக்குனர் டாக்டர்.கேசவன், துணை இயக்குனர் டாக்டர்.ரகுபதி, மருத்துவ அறிவியல் துறை துணை இயக்குனர் பொன்னுசாமி, மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், கிருத்திகா  சோமசுந்தரம், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, பூலுவபட்டி பாலு, ரோட்டரி நிர்வாகிகள் சிறீதரன், முத்துசாமி, மாமன்ற உறுப்பினர்கள் கவுன்சிலர்கள் கே.செல்வம், எம்.கண்ணப்பன், சண்முகசுந்தரம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மருத்துவத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.தமிழக அரசின் சுகாதார துறை மற்றும் திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில், திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் விழாவில் வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துணவு வழங்கினார்.அருகில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆகியோர் உள்ளனர்.
 

திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையை அடுத்துள்ள திருமூர்த்தி நகர்

தென்னை வளர்ச்சி விதை நாற்று பண்ணையில் சட்டமன்றதுணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சி.சண்முகவேல் எம்.எல்.ஏ.,சி.மகேந்திரன் எம்.பி.ஆகியோர் தென்னை கன்றுகளை நடவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் உடுமலை நகரமன்ற துணைத்தலைவர் எம்.கண்ணாயிரம்,விவசாய சங்க நிர்வாகிகள் ஜெயமணி, ராம்குமார், கள அலுவலர் தீப்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் அருகே உள்ள பொங்கலூர் அரசு விதைப்பண்ணையில் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர்  மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியம் தேவணம்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு விதைப்பண்ணை 39 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.இந்த பண்ணையில் தேசிய வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.51.5லட்சம் செலவில் 1.5 மெட்ரிக் டன் திறனுடைய புதிய விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.மேலும் ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளாளவு கொண்ட கிடங்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மூன்றரை லட்சம் லிட்டர் கொள்ளாளவு தரைமட்ட தண்ணீர் தொட்டியில் 1500 மீன் குஞ்சுகள் வளர்க்க விடப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் 7ஏக்கர் நிலப்பரப்பில் மக்காசோளம் மற்றும் சோளம் பயிரிட விதைகள் விதைக்க தயார் நிலையில் உள்ளது. நீண்ட காலமாக பயன்பாடு இன்றி இருந்த இப்பண்ணையை  தமிழக முதலவராக ஜெயலலிதா 3வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு முதல் செயல்பட துவங்கி ரூ.1,96,712 லாபம் ஈட்டியுள்ளது. இப்பண்ணைய வேளாண்மை துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார்.அப்போது இப்பண்ணையில் தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் சின்னவெங்காயம் ஆராய்ச்சி மையம்,தென்னை நாற்றுப்பண்ணை அமைக்க உத்தரவிட்டார். பின்னர் பண்ணையில் தென்னங்கன்று நட்டார். பொங்கலூர் அரசு விதைப்பண்ணையை சீரமைப்பு செய்து லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் மற்றும் வேளாண்மை துறையினரை பாராட்டினார். 
இந்த ஆய்வின் போது வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட  கலெக்டர் ஜி.கோவிந்தராஜன்,மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம்,பொங்கலூர் ஒன்றிய தலைவர் எஸ்.சிவாச்சலம், மாவட்ட வருவாய் அலுவலர் பாரிவேல்,பல்லடம் வட்டாட்சியர் அம்சவேணி,வேளாண்மை துறை இணை இயக்குநர் சந்தானகிருஷ்ணன்,  துணை இயக்குநர்கள் அல்தாப், மகேந்திரன், பொங்கலூர் வேளாண்மை அலுவலர் வசந்தாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் மக்காசோளம் வெட்டும் இயந்திரம் அதிக அளவில் ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று வேளாண்மை துறை அமைச்சரிடம் மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம் கோரிக்கை விடுத்தார்.அது பற்றி பரிசிலனை செய்வதாக  வேளாண்மை துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உறுதி அளித்தார்.திருப்பூர் அருகே உள்ள பொங்கலூர் தேவணம்பாளையத்தில் உள்ள அரசு விதைப்பண்ணை அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர். உடன் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உள்ளார்.