ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ரத்ததானம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67–வது பிறந்த நாளையொட்டி செக்கானூ ரணியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார்.
பாசறை மாவட்ட செயலாளர், ஆலங்குளம் செல்வம், பேரவை முன்னாள் மாவட்டச் செயலாளர் மனோகரன், திருப்பரங்குன்றம் ஓன்றிய அவைத்தலைவர் சந்தனத் தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜெயலலிதாவின் 67–வது பிறந்தநாளை குறிக்கும் வகையில், மாவட்ட கவுன்சிலர் அய்யப்பன் உள்பட 67 பேர் ரத்ததானம் செய்தனர்.
இதனையடுத்து செக்கானூரணி பஸ்நிலையத்தில் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி 5 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. முன்னாள் அமைப்புச் செயலாளர் ராஜேந்திரன், நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
முன்னாள் மாவட்டச்செயலாளர் ஜெயராமன், விவசாயபிரிவு மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி, உசிலம்பட்டி நகர்மன்ற தலைவி பஞ்சவர்ணம், மீனவர் அணி மாவட்டச் செயலாளர் போத்திராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.