Apr 25, 2020

திருச்சி கபசுரக் குடிநீர் பற்றி தலைமை சித்த மருத்துவர் காமராஜ் விளக்கம்


கபசுரக் குடிநீர் பருகினால் கொரோனாவைத் தடுக்கலாம்!
அரசு தலைமை சித்த மருத்துவர் காமராஜ் விளக்கம்

திருச்சி

சித்தர்கள் கண்டறிந்த கபசுரக் குடிநீரை தினமும் பருகினால் கரோனா நோய்த் தொற்றால் பாதிப்பிற்குள்ளாவதைத் தடுக்கலாம் என சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் கூறியுள்ளார்.


நாடு முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்துவரும் நிலையில், திருச்சி டாக்டர் அப்துல்கலாம் பொதுமக்கள் நலன் சங்கம் சார்பாக, வயலூர் ரோடு, குமரன் நகர், சிவன் கோவில் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் கபசுரக் குடிநீர், முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கபசுரக் குடிநீர் குறித்து பேசிய திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ், கபசுரக் குடிநீர் என்பது சாதாரண மருந்து. அது பல ஆண்டுகளுக்கு முன்பாக சித்தர்கள் கூறிய அருமருந்துகளில் ஒன்று. ஓலைச்சுவடியில் எழுதிவைக்கப்பட்டிருந்த இந்த மருந்தின் மகத்துவம் புரிந்து தற்போது பல புத்தகங்களில் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனை கரோனா வைரஸிலிருந்து மக்களை காக்கும் அருமருந்தாக தற்போது தமிழ்நாடு அரசும் அங்கீகரித்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கி வருகிறது. நுரையீரல் தொடர்பான நோய்களான, சளி, இருமல், மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்றவைக்கு இந்த மருந்து மிகவும் முக்கியமானது. இந்த கபசுரக் குடிநீரில் 15 வகையான மூலிகைகள் அடங்கியுள்ளன. டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் உதவியது போன்று, கபசுரக் குடிநீர் அனைத்து நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள உதவும். ஒன்று முதல் இரண்டு கிராம் கபசுரக் குடிநீர் பொடியை இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் காய்ச்சி, வடிகட்டி பெரியவர்கள் 60 மிலி, குழந்தைகள் 30 மிலி காலை வேளைகளில் பருகலாம்.கரோனா வைரஸ் பரவும் சூழ்நிலையில் சளி,காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் 8 மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த குடிநீரை பருகலாம். இதனால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. குறிப்பாக சர்க்கரை நோய்க்கு இது சிறந்த மருந்தாகும். இந்தக் குடிநீர் உடலுக்கு நோய்த் தடுக்கும் மருந்தாக உள்ளது. இந்தக் குடிநீரினை ஆங்கில மருந்து உண்பவர்களும் எவ்வித தயக்கமுமின்றி எடுத்துக்கொள்ளலாம் என்றார். இந்த மருந்து வெளிச்சந்தையில் 100 கிராம் 370 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இவற்றில் பல போலியானவையாக உள்ளதால் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்கப்படும் மருந்தினை பயன்படுத்தலாம் எனக் கூறினார்.கபசுர குடிநீர் பருகினால் கொரோனாவைத் தடுக்கலாம் என்றார்.

   இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட அரசு சித்த மருத்துவர்கள் தலைமை சித்த மருத்துவர் காமராஜ்  டாக்டர்.தமிழ்க்கனி, டாக்டர்.மெர்லின்  டோரோ,  டாக்டர்.இசையமுது  அப்துல் கலாம் பொது நலச் சங்கத் தலைவர் சச்சிதானந்தம்,செயலர்.சப்தரிஷி முருகானந்தம்,ஆலோசகர் சுந்தரம் செட்டி யார் ,பொருளாளர்.ராஜேந்திரன் பொதுமக்கள் நலன் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருச்சி மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச கபசுரக் குடிநீர்

திருச்சி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி ஆணையர் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி கபசுரக் குடிநீர் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டது

திருச்சி தமிழக அரசு ஆரோக்கியம் திட்டத்தின் கீழ்  தொற்று பரவாமல் இருக்க  எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையில்  கபசுர குடிநீர் தமிழக அரசால் வலியுறுத்தப்பட்டு  பொதுமக்களுக்கு  பணியாளர்களுக்கு  வழங்கப்பட்டு வருகிறது.

  அதனடிப்படையில்  இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இலவசமாக கபசுர மூலிகை பாக்கெட் வழங்கப்பட்டது திருச்சி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியாக சித்தாவில் பயன்படுத்தப்படும் கபசுர மூலிகை பாக்கெட்டுகளை மாநகராட்சி ஆனையர் சிவசுப்பிரமணியன,பொன்மலை கோட்டம் உதவி ஆணையர் தயாநிதி, திருச்சி பீமநகர் சித்த மருத்துவமனை மருத்துவர் ரத்தினம், ஆகியோர் கலந்துகொண்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கபசுர மூலீகை பாக்கெட் வழங்கினார் இதில் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு வாங்கி பயனடைந்தனர்

திருச்சி அரசு சித்த மருத்துவர்கள் மற்றும் அப்துல் கலாம் மக்கள் நலச் சங்கம் சார்பில் பகுதி வாழ் மக்களுக்கு கபசுர குடிநீர்

*தொடர் சேவையில் அரசு சித்த மருத்துவர்கள்*

தமிழ்நாடு அரசின் "ஆரோக்கியம்" திட்டத்தின் கீழ் கபசுர குடிநீர்  இன்று மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர்.சா.காமராஜ் அவர்கள் தலைமையில் திருச்சி , வயலூர் சாலை, குமரன் நகர்,சிவன் கோவில்  பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்கபட்டது.இதில் மருத்துவர்கள் டாக்டர்.தமிழ்க்கனி, டாக்டர்.மெர்லின்  டோரோ,  டாக்டர்.இசையமுது  ஆகியோர் பங்கு பெற்றனர். நிகழ்வில் டாக்டர் அப்துல் கலாம் பொது நலச் சங்கத் தலைவர் சச்சிதானந்தம்,செயலர்.சப்தரிஷி முருகானந்தம்,ஆலோசகர் சுந்தரம் செட்டி யார் ,பொருளாளர்.ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


இன்று மாலை 5 மணிக்கு திருச்சி கீழபுலிவார் ரோடு ,ஆனந்தா அவென்யூ பூங்காவில் இதே போன்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.