திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., சார்பில் , மக்கள் முதல்வர் அம்மா மீண்டு வர வேண்டி அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் அ.தி.மு.க., வினர் நூற்றுக்கணக்கானோர் அங்கப்பிரதட்சணம் செய்தனர். இதில் கருப்பசாமி எம்.எல்.ஏ., திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான்,ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன்,அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், தம்பி மனோகரன், வக்கீல் சுப்பிரமணியம், பாசறை சதீஷ், பேரூராட்சி தலைவர்கள் ஜெகதாம்பாள், பழனிசாமி, துணை தலைவர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணி, ஜெகதீசன், நகர செயலாளர் ராமசாமி, நகர இளைஞர் அணி செயலாளர் ஜெயபால், சேவூர் வேலுசாமி, திருப்பூர் கவுன்சிலர்கள் கணேஷ், கீதா, கருணாகரன், கனகராஜ், தங்கமுத்து, நீதிராஜன், ஈஸ்வரமூர்த்தி,ரத்தி னகுமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.