Nov 8, 2014

திருமங்கலம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி: செல்லூர் ராஜூ வழங்கினார்

திருமங்கலம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி: செல்லூர் ராஜூ வழங்கினார்
திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டியை அடுத்துள்ள காரைக்கேணி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, இவர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதில் அதிர்ச்சி அடைந்தது மரணம் அடைந்தார்.
ராமசாமி குடும்பத்துக்கு அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ, முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., மேயர் ராஜன்செல்லப்பா உள்பட மாநிலை மாவட்ட கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினர்.
இதில் சிறுபான்மை பிரிவு ஜான்மகேந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் தமிழ்செல்வம், யூனியன் சேர்மன்கள் திருச்செல்வம், தமிழழகன், மகாலிங்கம், நகர செயலாளர்கள் விஜயன், நாகராஜன், நெடுமாறன், துணை சேர்மன்கள் பாவடியான், சதீஷ் சண்முகம், மாவட்ட கவுன்சிலர் பிரபுசங்கர், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

அதிமுக சார்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி

 
மக்களின் முதலவர் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு ஏற்பட்ட அநீதியை கண்டு மனமுடைந்து அதிர்ச்சியில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.3 லட்சம் நிதி உதவி அளிக்க மாண்புமிகு அம்மா அவர்கள் உத்தரவின் அடிப்படையில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார் .உடன் கழக நிர்வாகிகள் ..

பண்ணை பசுமை கூட்டுறவு கடைகளில் மலிவு விலை காய்கறிகள் ரூ.14 கோடிக்கு விற்பனை: அமைச்சர் தகவல்

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேசியதாவது:–

பொது மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்திடும் வகையில் கூட்டுறவுத்துறையால் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் 210 மருந்தகங்களுடன் நடப்பு ஆண்டில் புதியதாக 100 அம்மா மருந்தகங்கள் தொடங்க திட்டமிடப்பட்டு, தற்போது 17 அம்மா மருந்தகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்த 100 மருந்தகங்களுக்கும் கட்டமைப்பு வசதிக்காக ரூ.20 கோடி மாநில விலை நிலைப்படுத்தும் நிதியத்திலிருந்து பயன்படுத்தப்படும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் மருந்துகள் விற்பனையில் குறைந்தபட்சம் 15 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

வெளிச்சந்தையில் காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் திறக்கப்பட்ட 53 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 31 வகையான காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னை மாநகரில் இரண்டு நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் இயங்கி வருகின்றன. 2.11.2014 வரையில் 48,45,104 கிலோ டன் காய்கறிகள் ரூ.13.72 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. தோட்ட பயிரிடுவோருக்கு கூட்டுறவு வங்கிகளின் வாயிலாக ரூ.147.08 கோடி அளவிற்கு காய்கறி சாகுபடி கடன் வழங்கப்பட்டுள்ளது.