திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் பயிற்சி நிலையங்கள்
மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மீதான தடை அரசின் மறு உத்தரவு
வரும்வரை அமலில் இருக்கும்
மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் 2020-2021 ஆம் ஆண்டிற்கான
சேர்க்கை பணிகள் (இணையவழி உட்பட) மற்றும் கட்டணம் வசூல் செய்தல் போன்ற எந்த ஒரு
பணியும் மேற்கொள்ளுதல் கூடாது என திட்டவட்டமாக அறிவிக்கப்படுகிறது.
*அரசாணை மீறி
செயல்படும் பள்ளிகள் மீது கடுமையான துறைவாரி நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட
ஆட்சித்தலைவர் சிவராசு எச்சரிக்கை*
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளுதல் சார்ந்து அரசால்
பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் பயிற்சி
நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்பாடுகள் மீதான தடைகள் அரசின்
மறுஉத்தரவு வரும்வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்உள்ள அனைத்து வகைபள்ளிகளிலும் 2020-2021 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை பணிகள் (இணையவழி உட்பட) மற்றும்
கட்டணம் வசூல் செய்தல் போன்ற எந்த ஒரு பணியும் மேற்கொள்ளுதல் கூடாது என திட்டவட்டமாக
அறிவிக்கப்படுகிறது.
இவ்வானையினை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடுமையான துறைவாரி நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு எச்சரிக்கை
விடுத்துள்ளார்.