வரும் பொங்கல் பண்டிகைக்காக தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு பகுதிகளில்
இலவச வேட்டி, சேலைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதேபோல் திருச்சிமாவட்டம். திருவெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 63,64,65 ஆகிய வார்டுகளை சேர்ந்த 5600 பயனாளிகளுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலைகளை அரசு கொறடா மனோகரன் எம்.எல்.ஏ மற்றும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார் ஆகியோர் வழங்கி சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் மற்றும் கட்சி நிர்வாகிகள், பயனாளி பெருமக்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.