Oct 3, 2014

திருப்பூரில் வழிப்பட்டு தலங்களில் அண்ணா தி.மு.க.வினர் பிரார்த்தனை








திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் பொதுசெயலாளர் ஜெயலலிதா மீண்டு வர வேண்டி வழிபாட்டு தலங்களில் சர்வ மத பிராத்தனை நடந்தது.
அண்ணா தி.மு.க.பொதுசெயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்கும்போது எல்லாம் திருப்பூர் மாவட்டத்திற்கு தனி கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக ரெயில்வே மேம்பாலம், குமரன் மகளிர் கல்லுரி, புதிய பஸ் நிலையம், 103 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வாளகம், இ.எஸ்.ஐ.மருத்துவமனை, மாநகராட்சிக்கு 330 கோடியில் 60 வது வார்டுகளுக்கும் சம நிலையில் வளர்ச்சி பணிகள், தினசரி குடிநீர் வழங்க ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. இது தவிர பள்ளிகூடங்களை தரம் உயர்த்துவது, பள்ளி குழந்தைகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது என்பது உள்ளிட்ட வைகலும் சிறப்பாக செய்து கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் கர்நாடக தனி நீதி மன்றம் அவருக்கு தவரான தீர்ப்பு வழங்கியுள்ளதால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது அவருக்கு எதிரான தீர்ப்பு என்று மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கு வழங்கப்பட்ட அநீதி என்று அவர் மீண்டு வர வேண்டி தமிழகம் முழுவதும் மக்கள் உண்ணாவிரதம், மனித சங்கிலி போராட்டம், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி அறவழியில் போராடி வருகின்றனர்.
திருப்பூர் ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், அவினாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.தூய பவுல் தேவாலயம், எஸ்.ஏ.பி.தியேட்டர் அருகில் உள்ள இஸ்லாமியர்கள் மசூதி ஆகியவற்றில் மாநகர மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலளார் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில், மகளிர் அணி செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், வசகு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான் ஆகியோர் முன்னிலையில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீண்டு வர வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த மூன்று நிகழ்சிகளிலும்  நிர்வாகிகள் கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், ஸ்டீபன்ராஜ், அட்லஸ் லோகநாதன்,உஷா ரவிக்குமார், கலைமகள் கோபால்சாமி, மாவட்ட பிரதிநிதி ரஞ்சித்ரத்தினம், யுவராஜ் சரவணன், கவுன்சிலர்கள் கணேஷ், சேகர்,ஈஸ்வரன், ஆகியோர்களும், சொர்க்கம் நீதிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக சி.எஸ்.ஐ.தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரத்தனியில் பாதிரியார் விஜயன், செயலாளர் ஜெபரூபன் ஜான்சன்,  பொருளாளர் ஜான் சந்திரராஜ், கமிட்டி உறுப்பினர் ஜெயராஜ் உள்ளிட்ட ஏராளமான அண்ணா தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.மேலும் திருப்பூர் ஏற்றுமதி இரண்டாம் நிலை பனியன் வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கம், பிரிண்டிங் மற்றும் கம்பக்டிங் சங்கம் ஆகியவை சார்பிலும் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டமும் நடந்தது.  
பின்னர் 'மக்கள் முதல்வர் ' ஜெயலலிதா மீண்டு வருவார் அம்மா என்ற நோட்டீசை மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான்,ஆகியோர் தலைமையில் அண்ணா தி.மு.க., வினர் பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.