*ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் சிறப்பு விரிவாக்கத் திட்டம் கொண்டு வரப்படும் குப.கிருஷ்ணன் பிரச்சாரத்தில் வாக்குறுதி*
திருச்சியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தரசநல்லூர் கம்பரசம்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முன்னாள் அமைச்சர் அதிமுக ஸ்ரீரங்கம் வேட்பாளருமான குப.கிருஷ்ணன் இன்றைக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்
*முத்தரசநல்லூர் பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது*
பொதுமக்கள் நலன் கருதி முத்தரசநல்லூர் பகுதியில் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு அதிமுக அரசின் திட்டங்களை உடனுக்குடன் நடைமுறைப்படுத்தி தருவதில் ஆதிசிவன் பெரும்பங்கு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
அப்போது குப.கிருஷ்ணன் பிரச்சாரத்தில் கூறும் பொழுது
அம்மா இருந்திருந்தால் என்ன செய்வார்களோ அந்த அத்தனையும் நான் செய்து தருகிறேன் இரட்டை இலை சின்னத்தில் முத்திரை பதித்துவெற்றிபெற செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்
மேலும் முத்தரசநல்லூர் ஊர் மக்களே அண்ணா திமுகதான் இந்த தொகுதியை வெல்வதற்கு எவரும் பிறக்கவில்லை
அடிப்படை வசதிகள் பஞ்சாயத்துக்களில் செய்து கொடுத்தாலும் தொகுதி மேம்பாட்டு களின் கீழ் புதிதாக
திருச்சி விரிவாக்கத் திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை நான் இந்த தொகுதியில் வெற்றி பெறுவேன் வெற்றி பெற்ற பின்பு சட்டமன்றத்திலே பேசி அதற்கு ஒரு வடிவம் அமைக்கப்பட்டு சிறப்பு திட்டத்தின் கீழ்
அனைத்து விஸ்தரிப்பு பகுதிகளும் நடைமுறைப்படுத்தப்படும்
இந்தியாவிலேயே கார்ப்பரேட் கம்பெனி முதலீடு செய்யக்கூடிய இடம் தமிழ் நாடு தான்
சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் எத்தனை தொழில் நிறுவனம் கொண்டுவந்தாலும் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தர முடியும்
திருச்சியில் மருத்துவ கல்லூரி கொண்டு வந்தது நான் தான் நாங்கள் எல்லா வேலையும் செய்து முடித்தோம் ஆனால் கருணாநிதி ஒரு பொட்டு வைத்து நாங்கள் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி என்று பெயரிட்டோம் பெரியவர் தமிழ் கி ஆ பெ விஸ்வநாதன் பெயரை மாற்றி வைத்தார்கள் பொட்டு வைத்தவர்கள் எல்லாம் நம்முடன் குடும்பம் நடத்த முடியாது
தொலைநோக்கு பார்வையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஈடாக போய்க்கொண்டிருக்கிறது தமிழகம் என்று கூறினார்.
இந்நிகழ்வின்போது பனையபுரம் கர்ணன் முத்தரசநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிசிவன் கழக நிர்வாகிகள் கழக தொண்டர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சித் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்