Oct 29, 2014

தொழிலாளர் நலன்களை காக்க நலத்திட்டங்களை வழங்கி வருபவர் மக்கள் முதல்வர் ஜெயலலிதா என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் 2484 பேருக்கு 56.70 லட்சம் மதிப்பிலான அரசு உதவிகளை வழங்கி பேசினார்.


தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் நல வாரியங்களின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் டவுன் ஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசினார்.மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் ராஜாராமன் வரவேற்று பேசினார். 
 விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம.ஆனந்தன் பயனாளிகளுக்கு ரூ 56.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
மக்கள் நலனுக்காக ஜெயலலிதா கடந்த 3 ஆண்டுகளில் நல வாரியங்களை ஏற்படுத்தி, அதில் தொழிலாளர்களை உறுப்பினர்கலாக்கி, நல வாரியங்கள் மூலமாக  தொழிலாளர்கள் நல்ல முறையில் பயன் பெற வேண்டும் என செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் அவருடைய வழிகாட்டுதலின்படி தமிழக அரசு இன்று பல்வேறு நல திட்டங்கள்;ஐ செய்து வருகிறது. 17 தொழிலாளர் நல வாரியங்களில் 1,17,528 உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினர்களுக்கு திருமண உதவித்தொகை, விபத்து, இயற்கை மரண உதவி தொகை வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற உறுப்பினர்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படுகிறது.
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் எந்த மாநில கட்டுமான தொழிலாளியாக இருந்தாலும் நல உதவி வழங்கப்பட்டு வருகிறது. இன்று நடைபெறும் விழாவில் 213 பேருக்கு கல்வி உதவி தொகையாக  46 லட்சத்து 30 ஆயிரத்து ஐநூறு ரூபாயும், 85 பேருக்கு திருமண உதவி தொகையாக 3 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயும், 19 பேருக்கு மகப்பேறு உதவியாக 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயும், 8 பேருக்கு கண் கண்ணாடி உதவி தொகையாக 3 ஆயிரத்து 983 ரூபாயும், 13 பேருக்கு இயற்கை மரண உதவி தொகையாக 2 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயும், 2 பேருக்கு விபத்து மரண உதவி தொகையாக 2 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயும், 144 பேருக்கு மாதம் ரூ 1000 க்கான ஓய்வூதிய ஆணைகள் என மொத்தம் 2484 பேருக்கு 56 லட்சத்து 70 ஆயிரத்து 483 ரூபாய் மதிப்பிலான அரசு உதவி வழங்கப்படுகிறது.
இப்படிப்பட்ட நலத்திட்டங்களை உருவாக்கி தமிழக தொழிலாளர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜெயலலிதாவழிகாட்டுதல் படி தமிழக அரசு வழங்கி வருகிறது. வருகிற காலத்தில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைய வேண்டும்.மக்கள் முதல்வர் ஜெயலலிதா தொழிலாளர்கள் நலனுக்காக இன்னும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க உள்ளாரஇவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசும்போது,
தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. 10ம் வகுப்பு முதல் கல்லூரி வரை அரசு கல்வி உதவி வழங்குகிறது. திருமண உதவி, இயற்கை, விபத்து மரண உதவி மற்றும் ஓய்வூதியங்களை வழங்கி வருகிறது. இவ்வாறு தொழிலாளர் நலனுக்காக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.எனு கூறினார்.
திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பேசும்போது கூறியதாவது:-
மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் வழிகாட்டுதல்  படி உங்களுக்கான திட்டங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் படி இந்த விழா நடக்கிறது. மக்கள் முதல்வர் ஜெயலலிதா என்றும் மக்களுக்கான திட்டங்களை எந்த இறுக்கமான சூழ்நிலையிலும் வழங்குகிறார்கள். அவர் மீண்டு மக்களுக்கான திட்டங்களை தொடர்வார்கள். என்று பேசினார்.
இந்த விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எம்.சண்முகம், துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, மார்க்கெட் சக்திவேல், கண்ணபிரான்,கலைமகள் கோபால்சாமி, ஜெகநாதன், சுந்தரமூர்த்தி, திருப்பூர் தொழிலாளர் அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து  கொண்டனர்.

திருப்பூர் மாநகராட்சி 56-வது வார்டு கே.வி.ஆர்.நகர் பகுதியில்

உள்ள கூலி தொழிலாளிகள்முருகன் மற்றும் மாகாளி ஆகிய இருவரின் வீடுகள் மழை காரணமாக  இடிந்து விழுந்தது.  வீடு இழந்த இருவர்களின் குடும்பத்தினர்களுக்கு திருப்பூர் தெற்கு தாசில்தார் கண்ணன், நகரமைப்பு குழு தலைவர் அன்பகம் திருப்பதி ஆகியோர் அரசு உதவி தொகை தலா ரூ.2500, மற்றும் வேட்டி-சேலை, அரிசி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை வழங்கினார். உடன் கிராம நிர்வாக அலுவலர் விஜயராகவன் உள்ளார்.

அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு எதிரான

அநீதியை எதிர்த்தும், மீண்டும் அவர் தமிழக முதல்வராக ஆட்சி பொறுப்பெற்கவும், அவர் பூர்ண நலம் பெறவும் வேண்டி மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு தலைமையில் காரத்தொழுவு அருள்மிகு அழகு நாச்சியம்மன் கோவில், திருமூர்த்திமலை அருள்மிகு அமணலிங்கேசுவரர் கோவில்களுக்கு நடைபயணம் சென்று பிரர்த்தனை செய்தனர்.