Jan 7, 2016

திருச்சிமாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு அரசு கொறடா மனோகரன் வழங்கினார்



திருச்சிமாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு அரசு கொறடா மனோகரன் வழங்கினார்

தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கை முகாமில் வாழும் இலங்கைவாழ் மக்களுக்கும்  பொங்கல் பரிசு அறிவித்துள்ளது. இந்நிலையில்  திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி,சர்க்கரை மற்றும்  கரும்பு, ரூ.100 பணம் உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை  திருச்சி   சிந்தாமணி கூட்டறவு பண்டக சாலையில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட அரசு கொறடா மனோகரன்,மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேல், சட்டபேரவை உறுப்பினர்கள் சிவபதி, வளர்மதி, இந்திராகாந்தி உள்ளிட்டோர் பொங்கல் பரிசுகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.