திருச்சி 10.09.2016
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் கல்பாளையம் ரோடு திருநகர் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய மாதிரி தொடக்கப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாமை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி அவர்கள் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தாhர்கள்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்.பழனிசாமி
தலைமை ஏற்றார். மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரிமுருகன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுகாதாரத் துறைக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அனைவருக்கும் சுகாதாரம் என்ற குறிக்கோளை எய்தும் நோக்குடன் தேசிய ஊரக சுகாதார நலத்திட்டம்ää தமிழ்நாடு சுகாதார நலத்திட்டம் என்ற இரண்டு மாபெரும் நலத்திட்டங்கள் நமது மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த 2005-ம் ஆண்டு தேசிய ஊரக சுகாதார திட்டம் தொடங்கப்பட்டது. கிராமப்புற மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு முதல்வர் அவர்கள் உத்தரவுக்கிணங்க தமிழ்நாட்டில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள கிராமங்களில் 1155 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 14 ஒன்றியங்களிலும்ää 3 முகாம்கள் வீதம் 42 சிறப்பு மருத்துவ முகாம்கள்; நடைபெற உள்ளது. இன்று (10.19.2016) மண்ணச்சநல்லூரில் இச்சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும்.
ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஒன்றியத்திற்கு ஒரு முகாம் வீதம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
சாதாரண நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் வழங்கப்படுகிறது. கிராமப்புற ஏழை எளிய மக்கள் இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு கட்டணமில்லாமல் தங்களது உடல் முழு பரிசோதனை செய்து கொள்ளலாம். மேல்சிகிச்சை தேவைப்பட்டால் அவற்றிற்கும் பரிந்துரை செய்யப்படும்.
தொலைதூரத்தில் வசிக்கும் கிராமப்புற மக்களுக்கு தாய் சேய் நலம் தொற்றா நோய்களான புற்றுநோய் சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்கள் வயது முதிர்ச்சியினால் ஏற்படும் நோய்கள் அறுவை சிகிச்சை எலும்பு மூட்டு சிகிச்சை கண் மருத்துவம் காதுமூக்கு தொண்டை மருத்துவம் பல் மருத்துவம்ää தோல் நோய் சிகிச்சை ஆகியவற்றிற்கு சிறப்பு மருத்துவர்களை கொண்டு இத்திட்டத்தின் கீழ் ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படும். மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கப்படும்.
கடந்த ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2015-2016-ம் ஆண்டு 42 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இம்முகாம்களில் மொத்தம் 47 ஆயிரத்து 477 கிராமப்புற மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 342 கிராமப்புற மக்களுக்கு மேல் சிகிச்சைக்காக மருத்துவ பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு
அமைச்சர் பெருமக்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் சீனிவாசன் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் .ராமு மண்டல குழுத்தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி மனோகரன் மண்ணச்சநல்லூர் ஒன்றயக்குழு தலைவர்(பொ) வெற்றிசெல்வி ஒன்றிக்குழு உறுப்பினர்கள் விமலாமோகன் குமார் அன்னகாமு பாஸ்கர் சடையன் கதிர்வேல் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் அரிசிமூக்கன் அமுதாஜெயராமன் இணை இயக்குநர் (சுகாதாரம்) ரவீந்திரன் மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.