விருதுநகரில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் புதன்கிழமை வழங்கினார்.
விருதுநகர் கே.வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்
நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் ராமச்சந்திரன் தலைமை
வகித்தார். பள்ளியின் செயலாளர் மதன்மோகன் முன்னிலை வகித்தார். நகராட்சி
தலைவர் மா.சாந்தி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கி.கலாநிதி ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்
க.பாண்டியராஜன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை
வழங்கினார். இதில், நகராட்சி துணைத் தலைவர் மாரியப்பன், நகர செயலாளர்
முகமதுநயினார், மாவட்ட அவைத் தலைவர் மற்றும் நகராட்சி உறுப்பினர் ஐ.மருது,
நகராட்சி உறுப்பினர்கள் த.அன்னலட்சுமி, தனலட்சுமி, செய்யது இப்ராஹூம்
ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 420 பேருக்கு மடிக்கணினி
வழங்கப்பட்டது. இதேபோல், ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி
மாணவிகள் 433 பேருக்கு, செளடாம்பிகா மாணவ, மாணவிகள் 69 பேருக்கும்,
சத்திரரெட்டியாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 73 பேருக்கும்,
தியாகராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 93 பேருக்கும் மொத்தம் 1088
பேருக்கு ரூ.1.47 கோடியில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.