Sep 18, 2018

திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கண்காட்சியை திறந்து வைத்தார்

திருச்சி
18.09.2018
 
 தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி சிங்காரதோப்பில்  மாநகர மக்களின் பேராதரவோடு 44 வருடங்களை வெற்றிகரமாக கடந்து 45 வது வருடத்தில் அடிஎடுத்து வைக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவிப்பதோடு வழமைபோல் இவ்வாண்டும் வருகின்ற நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 18.09.2018  முதல் 20.10.2018 வரை (ஞாயிறு உட்பட) கொலு கண்காட்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இக்கண்காட்சியின் சிறப்பு அம்சமாக பலவித கொலு பொம்மைகள், கொலு செட்டுகள், கொண்டபள்ளி  பொம்மைகள், மரபாச்சி பொம்மைகள், காகிதக்கூழ் பொம்மைகள், மண், பளிங்குக்கல், மாக்கல், நவரத்தின கற்களினாலான பொம்மைகள் குறைந்த பட்சமாக ரூ.50 முதல் ரூ.25000 வரை இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இக்கண்காட்சியை திரு.கு.இராசாமணி,இ.ஆ.ப.,மாவட்டஆட்சித்தலைவர்,    திருச்சிராப்பபள்ளி,அவர்கள் 18.09.2018 செவ்வாய் கிழமை அன்று மாலை 6.00  மணியளவில் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்தார்கள்.
இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பொம்மை செட்டுகள்:

                 அஷ்ட பைரவர் செட், நவதுர்கா வாகனம், கிராமிய விளையாட்டுகள் செட், வேத மூர்த்திகள் செட், கார்த்திகை தீபம், கள்ளழகர் செட், கல்யாண ஊர்வலம்,  கிரிக்கெட், சஞ்சீவி செட், பெருமாள் ஊர்வலம் செட், நவ கண்ணிகள் செட், பானைகிருஷ்ணன் செட், தசாவதாரம் செட், அஷ்டலக்ஷ்மி செட், கயிலாய மலைசெட், கார்த்திகை பெண்கள் செட், ஸ்ரீரங்கம் செட், அன்னபூரணி செட்,          விநாயகர் செட், மஹாலக்ஷ்மி வரம் செட், மாயா பஜார் செட்,                             சீனிவாச கல்யாணம் செட், மீனாட்சி கல்யாணம் செட், மும்மூர்த்தி செட், ராமர் பட்டாபிஷேகம் செட், தாத்தா பாட்டி செட், பெருமாள் தாயார் செட்,
    ராமர் பாலம் செட், சுக்ரீவர் பட்டாபிஷேகம் செட், கனகதாரா செட், முருகர் உபதேசம் செட், கஜேந்திர மோட்ஷம் செட், மாங்கனி செட், கீதா உபதேசம் செட், ஜோதிர்லிங்கம் செட், பரத நாட்டியம் செட், அசோகவனம் செட், பீஷ்மர் அம்பு படுக்கை செட், கனையாழி செட், ஆழ்வார் செட், கோபியர் டான்ஸ் செட், விவசாய செட், தட்டாங்கி செட், ஜடாயு மோட்சம் செட், ராமர் செட், அகலியா சாப விமோட்சம் செட் முதலான பொம்மைகள்  கல்கத்தா, மணிபூர், இராஜஸ்தான், ஒரிஸா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட பொம்மைகள், எண்ணற்ற தனி பொம்மைகளும் பலவிதமான மாடல்களில் வண்ணங்களில் இடம் பெற்றுள்ளன.
              இக்கண்காட்சியில் காட்சிக்கும் விற்பனைக்கும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்டுள்ள அழகிய கொலு பொம்மைகளை திருச்சி மாநகர மக்கள் வாங்கி தங்கள் இல்லத்திற்கு அழகூட்டி, வரும் நவராத்திரி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ அன்புடன் அழைக்கின்றோம்.
     என பூம்புகார் சார்பாக மேலாளர் தெரிவித்தார்