Nov 14, 2014

பிரான்ஸ் எம்.ஜி.ஆர். விழாவில், மக்களின் முதல்வர் ஜெயலலிதா தபால் தலை வெளியீடு


பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள செயின்ட் தெனிஸ் என்ற இடத்தில் ஆண்டு தோறும் எம்.ஜி.ஆர். விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா, கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. விழாவில், நடிகர் அசோகனின் மகனான திரைப்பட நடிகர் வின்சென்ட் அசோகன், ‘இதயக் கனி’ மாத இதழ் ஆசிரியர் எஸ்.விஜயன் அகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

விழாவில், பிரான்ஸ் நாட்டின் அனுமதி பெற்று, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் தபால் தலையை செயின்ட் தெனிஸ் துணை மேயர் பொதில் ஹமுதி வெளியிட நடிகர் வின்சென்ட் அசோகன் பெற்றுக் கொண்டார். இதே போன்று, தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தபால் தலையை மற்றொரு துணை மேயர் சிலிமான் ஏபல்லா வெளியிட எஸ்.விஜயன் பெற்றுக் கொண்டார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி, பாரிஸ் நகரில் எம்.ஜி.ஆர். சிலை திறக்க வேண்டும் என்ற அறிவிப்பு இந்த விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கவிதை அரங்கம், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், பிரான்ஸ் மற்றும் அண்டை நாடுகளில் இருந்து ஏராளமான எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் முருகு பத்மநாபன் செய்திருந்தார்.

மக்களின் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி சென்னையில் 2 நாட்கள் மாநாடு


சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அடுத்த ஆண்டு (2015) மே 23, 24 தேதிகளில் உலக முதலீட்டாளர்களின் மாநாடு நடைபெறுகிறது.
மக்களின் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி இந்த மாநாடு சென்னையில் 2 நாட்கள் நடைபெறுகிறது.
அந்நிய நேரடி முதலீடுகளை வரவேற்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 3–வது இடத்தில் உள்ளது. ஜெயலலிதா அறிவித்த ‘தொலைநோக்கு திட்டம் 2023’ தொழில் கொள்கையில் காணப்பட்டுள்ள முற்போக்கு அம்சங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் அந்நிய முதலீட்டை பெருமளவுக்கு ஈர்க்கும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் சந்தை வர்த்தக கொள்கையால், பொருளாதார மேம்பாட்டில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
கடந்த 1992-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தொழிற்கொள்கையால் மாநிலத்தில் போர்டு, ஹூண்டாய் போன்ற சர்வதேச மோட்டார் நிறுவனங்கள் மட்டுமின்றி டிவிஎஸ், அசோக் லேலண்ட் உள்ளிட்ட உள்ளூர் நிறுவனங்களும் தமிழகத்தில் உற்பத்தி நிலையங்களை தொடங்கியதன் காரணமாக, சர்வதேச அளவில் மோட்டார் வாகன உற்பத்தியில் தமிழகம் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.
மின்னணு உற்பத்தியில்
பெரும் புரட்சி
இதேபோல், கடந்த 2003-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தொழிற்கொள்கையால் மின்னணு உற்பத்தியில் பெரும் புரட்சி ஏற்பட்டது. இதனால் மோட்டோ–ரோலா, பாக்ஸ்கான், பிளக்ஸ்டிரானிக்ஸ், டெல், சாம்சங் போன்ற பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகள் அமைத்ததோடு, தற்போது மின்னணு பொருள் ஏற்றுமதியில் தமிழகம் நாட்டிலேயே பெரும் பங்கு வகிக்கிறது, இதேபோல், ஜவுளி, தோல் மற்றும் மோட்டார் வாகனங்கள் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
பொருளாதார வளர்ச்சி
22% அதிகரிப்பு
தொழில்மயமாக்கப்பட்ட 3 மாநிலங்களில் முதலிடம் வகிக்கும் தமிழகம், சர்வதேச அளவில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இதனை மேம்படுத்தும் வகையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ம் தேதி, தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 என்ற மாபெரும் திட்டத்தை அறிமுகப்படுத்தியதால், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 22 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், 217 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி மக்களின் முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய தமிழ்நாடு தொழிற்கொள்கை 2014-ன் மூலம் மிகப்பெரிய அளவில் தொழில்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் மாறியிருப்பதோடு, தானியங்கி, உதிரிபாகங்கள் தயாரிப்பு, உயிரி தொழில்நுட்பம் ஆகியவற்றில் பெரும் வளர்ச்சி கண்டிருப்பதாகவும், தொழில்துறையில் மின்தங்கிய தென்மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகளால் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அபரிமிதமான தொழிலாளர்கள், தொழில் தொடங்கிட ஏற்ற சூழ்நிலை ஆகியவற்றின் காரணமாக முன்னேற்றம் கண்டுவரும் தமிழகத்தில், சர்வதேச மூதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் அடுத்த ஆண்டு மே மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது.
அபரிமிதமான தொழிலாளர்கள்,
தொழிலுக்கு ஏற்ற சூழ்நிலை
மின்னணு, உதிரி பொருட்கள், ஜவுளி, வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்துதல், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் மருந்து பொருட்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள், ரசாயனம், பெட்ரோ கெமிக்கல், பொறியியல் மற்றும் சாலைகள், சிறுதுறைமுகங்கள் மேம்பாடு, தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், மரபுசாரா எரிசக்தி முகமைகள் ஆகியவற்றில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு இந்த மாநாடு வகை செய்யும்.
ஜப்பான், அமெரிக்கா,
பிரான்ஸ், ஜெர்மனி
தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் உள்ள முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. முன்னதாக இதுதொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஜெட்ரோ, யுஎஸ்ஐபிசி அமைப்புகள் இந்த மாநாட்டுக்கு ஜெட்ரோ (ஜப்பான் எக்ஸ்டர்னல் டிரேட் ஆர்கனைசேஷன்), யுஎஸ்ஐபிசி (யுஎஸ் – இண்டியா பிசினஸ் கவுன்சில்) தோக்ரா (கொரியா டிரேட் இன்வெஸ்ட்மெண்ட் ப்ரமோஷன் ஏஜென்சி) ஆகிய அமைப்புகள் தமிழக அரசுடன் பங்குதாராக (பார்ட்னர்) இணைந்து செயல்படும்.
மேலும் சிஐஐ, எப்ஐ, சிசிஐ, அஸ்சோசாம், எம்சிசிஐ ஆகிய முக்கிய தொழில்துறை சங்கங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தங்களை செய்து கொள்ளவும் உத்தேசித்துள்ளது.
பிரைஸ் பாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் (பியுசி) இந்த மாநாட்டுக்கு ‘அறிவுசார் பங்குதாரர்’ (நாலெட்ஜ் பார்ட்னர்) ஆக செயல்பட தேர்வு செய்யப்பட்டள்ளது.
மேலும் இந்த மாநாடு நடைபெறுவதற்கு தமிழ்நாடு தொழிற்துறை வழிகாட்டு ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு மையம் (கைடன்ஸ் பீரோ) மாநாட்டுக்கு செயலாளராக (செகரட்டேரியில்) செயல்படும்.
உற்பத்திக்கு உலகளவில் உன்னத இடம் தமிழகம்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொழிற்துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் உற்பத்தித்துறையில் சர்வதேச அளவில் உன்னத இடத்தை தமிழ்நாட்டுக்கு உருவாக்கிக் கொடுக்கும் தமிழ்நாடு முன்னோடி என்பதை நிரூபிக்கும்.
இத்தகைய மாநாடுகள் மூலம் அமைதி, முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெறும்.
தமிழக அரசு இனறு வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.