திருச்சி
திருச்சி
அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு பிரம்மாண்டமான வரவேற்பு
திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு திருச்சி விமான நிலையத்தில் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.இதில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக உள்ள வெல்லமண்டி நடராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.
இரவு சுமார் 10 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.
தாரை தப்பட்டைகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது,தொண்டர்கள், நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், மாலை அணிவித்து.வெல்லமண்டி நடராஜன் வரவேற்பளித்தனர்.
மேலும் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளரான பத்மநாதன் விமான நிலையத்திற்கு சென்று வெல்லமண்டி நடராஜன் அவர்களை வரவேற்றார்
மேலும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்களை வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர் ஜவகர் ,சுரேஷ் குப்தா, அன்பழகன்,கழக நிர்வாகிகள் மகளிர் அணி செயலாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்