ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் மேயர், துணை மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 15 நாட்களாக கர்நாடகா சிறையில் அடைப்பட்டுள்ளார்.அவரை விடுதலை செய்ய வேண்டி தமிழ்நாடு முழுவதும் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும் ,யாகம் நடத்தியும், தலைமுடி காணிக்கை செலுத்தியும், கருப்புசட்டைகள் அணிந்தும், மனித சங்கிலி நடத்தியும், அமைதியான முறையில் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி திருப்பூர் பல்லடம் ரோடு, அருண் சில்க்ஸ் அருகில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம் தலைமை தாங்கினார். மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர், துணை மேயர் சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலளார் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டியும், நல்ல உடல்நல ஆரோக்யத்துடன் இருக்க வேண்டியும் 1 மணி நேரம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து 4-வது மண்டலம் சார்பில் காலை 5 மணி முதல், மாலை வரை அபிஷேக, அலங்கார பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்து. மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் 4வது மண்டலம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், நகர மற்றும் கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தலைமை கழக பேச்சாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்