அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விரைவில் விடுதலை பெற வேண்டும் என வலியுறுத்தி சைதாப்பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜி. செந்தமிழன் தலைமையில் அதிமுக வினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
| |
. | |
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா விரைவில் விடுதலை பெற வேண்டும் என வலியுறுத்தி சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தின் முன்பாக ஜி. செந்தமிழன் எம்எல்ஏ தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் சி. பொன்னையன் வாரியத் தலைவர்கள் ஆதிராஜாராம், சி.ஆர். சரஸ்வதி அதிமுக ஓட்டுநர் அணிச் செயலாளர் கமலக்கண்ணன், தலைமைக் கழக பேச்சாளர்கள் ஜெய கோவிந்தன், நிர்மலா பெரியசாமி, தீக்கனல் லட்சுமணன், காவேரி, தஞ்சை சங்கர், கடியாப்பட்டி கிருஷ்ணன், சிந்தை ஆறுமுகம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். சைதை பகுதிச்செயலாளர் என்.எஸ். மோகன், தொகுதி செயலாளர் மனோகரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் என்.கே. வத்சலா மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் ஆ. பழனி மற்றும் ஞானமுத்து, சைதை சாரதி, பேபி ராமகிருஷ்ணன், வீரராகவன், நரேஷ், கபீர், குமரவேல், புதுவை நடேசன் உள்ளிட்டோரும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். அதிமுக கவுன்சிலர்கள் ஆர். சங்கர், நா. பாஸ்கர், வட்ட செயலாளர்கள் எஸ். வீரமணி, என்.எஸ். குட்டி, மற்றும் ஏ. பாஸ்கர், சேது ராஜன், ஏ.வி.கே. ராஜ், ஈகை சீனு, ஹரி ஜெயபால், அறிவழகன், கிண்டி ராமு, இருதய தாஸ், ஷேக் அலி, வெங்கடேஷன், விஜி, வீரய்யன் உட்பட மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகளும் ஏராளமான மகளிரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். |