திருப்பூர் ஸ்ரீ வீரரகவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் வெங்கட் ரமணா கோவிந்தா என்ற பக்தர்களின் கோஷத்தால் விண் அதிர்ந்தது. விழாவில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கலெக்டர் கோவிந்தராஜ், மேயர் விசாலாட்சி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
800 ஆண்டுகள் பழம் பெருமை வாய்ந்த இக்கோயிலுக்கு15 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
காலை ஸ்ரீவீரராகவப் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின், வாஸ்து சாந்தி பூஜை மற்றும் யாகம் நடந்தது. ஸ்ரீரங்கம் ராமன் பட்டர் தலைமையில், பட்டாச்சாரியார்கள் பூஜை, பாராயணங்கள் செய்தனர். யாக சாலை பிரவேசம், கும்பங்களில் எம்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களின் பிம்ப அக்னியாதி சதுஸ்தான பூஜைகள் நடைபெற்றன.7 மணிக்கு சதுஸ்தான பூஜைகள், சாந்தி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு காலை 9.47 மணிக்கு, விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம், 10.22க்கு, மூலவர்களுக்கு மஹா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.தொடர்ந்து வெங்கட் ரமணா கோவிந்தா என்ற பக்தர்களின் கோஷத்தால் விண் அதிர்ந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மூலவர்களுக்கு ப்ராணப்திஷ்டை, மஹா தீபாராதனைகளும் நடைபெற்றன..கும்பாபிஷேகத்தை ஸ்ரீரங்கம் க.ஸ்ரீராமன்பட்டாச்சார்யார் தலைமையிலான குழுவினர் நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி, ஆணையாளர் மா.அசோகன், துணை மேயர் சு.குணசேகரன், மாநகர காவல் ஆணையாளர் எஸ்.என்.சேஷசாய், மாநகர மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான், கிருத்திகா சோமசுந்தரம், மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள், எம்.கண்ணப்பன் (45வது வார்டு ) உள்ளிட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அண்ணா தி.மு.க.மாவட்ட நிர்வாகிகள் அன்பகம் திருப்பதி, எம்.மணி, மார்க்கெட் சக்திவேல், கே.என்.சுப்பிரமணியம், அட்லஸ் லோகநாதன், எஸ்பி.என்.பழனிச்சாமி, திருமுருகன்பூண்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் லதா சேகர்,கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதனை தொடர்ந்து சிறப்பு மஹா அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மலை 6.30 மணிக்கு வாழும் கலைபயிற்சி பெங்களூர் டாக்டர்.அருண்மாதவனின் இன்னிசை நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து நாகை முகுந்தனின் தெய்வீக சொற்பொழிவு நடைபெற்றது.
ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் காண வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர்களும், மாநகர காவல்துறையும் செய்திருந்தனர். மாநகர ஆணையாளர் எஸ்.என்.சேஷசாய் தலைமையில் உதவி ஆணையாளர்கள் திருநாவுக்கரசு, சுந்தரவடிவேல் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.கோயில் பகுதிகளிலும், சுற்றுப்பகுதிகளிலும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.பழைய பஸ் நிலையம் வரும் ஒரு சில பேருந்துகள் இடம் மாற்றியமைத்து பக்தர்களுக்கு வசதி செய்து இருந்தனர்.
ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாநகர பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொண்ட மஹா சிறப்பு அன்னதானம் விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் விழா கமிட்டி நிர்வாகிகள் டாக்டர் எஸ்,தங்கவேல், கிளாசிக் போலோ டி.ஆர்.சிவராம், கிரீட்டிங்ஸ் வி.ராஜேந்திரன், சௌமீஸ் எக்ஸ்போர்ட் எம்.முத்து நடராஜன், திருப்பூர் ஸ்ரீ வாரி டிரஸ்ட் கே.பி.ஜி.பலராமன், செல் எக்ஸ்போர்ட் தம்பு (எ) சி.ஆர்.ராஜேந்திரன், உஷா எம்.எம்.ரவிக்குமார் மற்றும், ராஜகோபால் ஆகியோர் செய்திருந்தனர்.
வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருப்பூர் மாநகரம் விழா கோலம் பூண்டிருந்தது.