திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகளை திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் ஆகியோர் வழங்கினர். விழாவில் மேலும் பூளவாடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 163 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 104 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், குடிமங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 45 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 111 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், பெதப்பம்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 190 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 177 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 35 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 35 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், ஏ.நாகூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 116 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும், 71 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளும் ஆக மொத்தம் 1012 பேருக்கு வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எம்.சண்முகம், குடிமங்கலம் ஒன்றியச்செயலாளர் சுந்தரசாமி, தொகுதிச்செயலாளர் பாண்டியன், ஒன்றியக்குழுதலைவர் முருகன், உடுமலை நகரமன்றத்துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், வட்டாட்சியர் சைபுதீன், செயல் அலுவலர் செல்வராஜ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் முரளி, பூளவாடி ஊராட்சி மன்றத்தலைவர் முருகானந்தன், குடிமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜனார்த்தனன், மாவட்ட கவுன்சிலர் ராதாமணி, தாசில்தார் சைபுதீன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குனர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய அண்ணா தி.மு.க.நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர் பங்கஜம் மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.