Jan 1, 2015

இந்தியாவிலேயே அதிக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருபவர் அம்மா வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச்சு








திருப்பூர், ஜன. 1-
திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு, தமிழக அரசின் சார்பில் இலவச வேட்டி-சேலை வழங்கும் விழா திருப்பூர் பாண்டியன் நகரில் நடந்தது. தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி சிறப்புரையாற்றினார்.திருப்பூர் கலெக்டர் கு.கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.  திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன் முன்னிலை வகித்தனர். 
 விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்கி பேசும்போது கூறியதாவது&
மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் வழிகாட்டுதல்படி செயல்படும் இந்த அரசு மக்களுக்கான நலத்திட்டங்கள் பல செயல்படுத்தி வருகிறது. அம்மா அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற போது 54 வாக்குறுதிகள் அளித்தார்கள்.ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள மக்கள் பயன் பெற வேண்டும் என்ற அடிப்படையில் அம்மா அவர்கள் திட்டங்களை தீட்டி செயல்படுத்து வருகிறார். எத்தணையோ பேர் முதல்வராக பொறுப்பேற்றனர். தேர்தல் வாக்குறுதிகளை அவர்கள் அளித்தார்கள். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் அம்மா அவர்கள் அளித்த 54 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியவர் அம்மா அவர்கள். 
 இன்றைக்கு தமிழக மக்கள் அம்மா அவர்களுக்கு ஆதரவை தொடர்ந்து தந்து கொண்டிருக்க காரணம் அம்மா அவர்களின் மகத்தான திட்டங்கள். அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 20 கிலோ விலையில்லா அரிசி, திருமண உதவியாக 4 கிராம் தங்கம், திருமண உதவி தொகை போன்ற நல்ல திட்டங்களை அம்மா அவர்கள் வழங்கி வருகிறார். மேலும் கல்விக்கா அதிக நிதி ஒதுக்கு பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்து பொருட்களையும் விலையில்லாமல் வழங்கி தமிழகம் கல்வியில் முன்னேற வழிவகுத்தவர் அம்மா அவர்கள்.
 மக்கள் பயன்பெற ஒவ்வொரு குடும்பத்துக்கும் விரிவான மருத்துவகாப்பீட்டு திட்டம், இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம் என அம்மா அவர்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். என்றைக்கும் நீங்கள் அம்மா அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
 விழாவில், மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், கவுன்சிலர்கள் பட்டுலிங்கம், அன்பகம் திருப்பதி,  கணேஷ், முருகசாமி,சண்முக சுந்தரம்,  சபரி, கனகராஜ், பாலன், ,மற்றும் கருணாகரன், நீதிராஜன், ராஜேஷ்கண்ணா, ராஜ்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.