Oct 3, 2014

ஜெ. தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த அண்ணாதுரை கார் டிரைவர் மரணம்

ஜெ. தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த அண்ணாதுரை கார் டிரைவர் மரணம்



திருச்சி 
சோமரசம்பேட்டை அருகே உள்ள அரியாவூர் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவி (84). இவர் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாத்துரையின் கார் டிரைவராக பணியாற்றியவராகும். 1968ம் ஆண்டு வரை அண்ணாத்துரையிடம் பணியாற்றி விட்டு அவரின் மறைவுக்கு பிறகு அரசு விரைவு பஸ் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இதற்கிடையே பணி காலத்தில் தொழிற்சங்க தலைவராகவும் இருந்து அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்துள்ளார். தொடர்ந்து அ.தி.மு.க.வில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வந்தார். பணி ஓய்வுக்கு பிறகு வீட்டில் இருந்து வந்த அவருக்கு ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையும், அவருக்கு ஜாமீன் கிடைக்காததும் அவருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுத்த நாள் முதல் தனது வீட்டிலேயே உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதனால் அவரது உடல் நிலை கடந்த 2 நாட்களாக மிகவும் மோசமானது. நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சஞ்சீவியின் உயிர் பிரிந்தது. இதனை தொடர்ந்து அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். சஞ்சீவிக்கு பஞ்சவர்ணம் (70) என்ற மனைவியும், கலையரசி (45) என்ற மகளும் உள்ளனர்.