May 16, 2020

அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்ட அமைச்சர் வளர்மதி

திருச்சி மே 16

அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி



திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார்



 கொரோனா தொற்று பாதிப்பை அடுத்து தமிழகத்தில் பல்வேறு கட்சியினரும் தனியார் அமைப்பினரும் உணவு மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர். தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகத்தில் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளிலும் இலவச உணவு வழங்கி வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக திருச்சியில்  வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும்  ஸ்ரீரங்கம் பகுதியை சார்ந்த பொதுமக்களுக்கு அப்பகுதியில் உள்ள அம்மா மண்டப சாலையில், மற்றும் 
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகங்களில் மூன்று வேளைகளும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவுகளில் இன்று தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,  
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் அப்போது அம்மா உணவகத்தின் உள்ள சமையல் கூடம் மற்றும் பொதுமக்கள் அருந்தும் குடிநீர் ஆகியவை ஆய்வு செய்து அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளையும் அவர் சாப்பிட்டார். மேலும் பொதுமக்களிடம் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை குறித்தும் கேட்டறிந்தார். மேலும் இவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் சிறந்த முறையில் உரிய நேரத்தில்  தரமான உணவுகளை வழங்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி பனையபுரம் கர்ணன் அதிமுக பொறுப்பாளர்கள் அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

திருச்சி தொடர்ச்சியாக நிவாரணப் பொருட்கள் வழங்கி வரும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

திருச்சி மே 15

திருச்சியில் 
அரிசி மளிகை மற்றும் காய்கறிகள் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதற்கு முன்பு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களை வரிசையில் அமரச் செய்து சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தி அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய  பின்னர் பொருட்களை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பொதுமக்களுக்கு வழங்கினார். 

கொரோனா  தாக்குதல் காரணமாக 
தமிழகத்திலும் 
ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏழை - எளிய பொதுமக்கள்  உணவுக்கு  கஷ்டப்பட்ட வருகின்றனர். 

தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும்  நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்த வகையில் திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 45 நாட்களுக்கு மேலாக வார்டு வாரியாக 

                     
நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
இன்று மலைக்கேட்டை  பகுதிக்குட்பட்ட 13வார்டு பொதுமக்களுக்கு அப்பகுதியில் 
உள்ள லூர்துசாமி பிள்ளை பூங்காவில் 
அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் அடங்கிய 
தொகுப்பை 250 குடும்பத்தினருக்கு  வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள்  சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு நாற்காலி போட்டு அமர வைக்கப்பட்டனர்.
மேலும் முக கவசம் அணிந்து பொருட்களைப் வாங்கி சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஜவகர்லால் நேரு, பகுதி செயலாளர் அன்பழகன், சந்து கடை சந்துரு அதிமுக வட்ட பொறுப்பாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.