திருச்சி
ஸ்ரீரங்கம்,அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அன்று காலை காவிரி ஆற்றில் தென்கரையில் மேல சிந்தாமணி படித்துறை பகுதியில் இருந்து பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர். மாலையில் கால யாக பூஜையும் தொடர்ந்து நேற்று காலை கால யாக பூஜையும், பிரசாதம் வழங்குதல் நடைப்பெற்றது. மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும் நடைப்பெற்றது. இன்று காலை நான்காம் கால யாக பூஜையும், மஹா பூர்ணாஹீதியுடன் கலசங்கள் புறப்பாடு நடைப்பெற்றது.
அதனை தொடர்ந்து திருக்குடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவில் யாக சாலை பிரவேஷம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் விமானத்திற்கும், மூலஸ்தானத்திற்கும் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்