Oct 11, 2014

மக்கள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி..எம்.எஸ்.எம்.ஆனந்தன் சிறப்பு வழிபாடு

திருப்பூர் வடக்கு ஒன்றிய அண்ணா தி.மு.,கழகம் சார்பில் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழி காட்டுதலின் பேரில் மக்கள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி ஒன்றிய கழக செயலாளரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான கே.என்.விஜயகுமார் தலைமையில், ஒன்றியகுழுபெருந்தலைவரும், கல்விக்குழு தலைவருமான ஆர்.சாமிநாதன், ஒன்றிய கழக அவைத்தலைவரும், மாநகராட்சி கல்விக்குழு தலைவருமான வி.பட்டுலிங்கம், ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளரும், மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவருமான பூலுவபட்டி எம்.பாலு ஆகியோர்  முன்னிலையில் பெருமாநல்லூர் அருள்மிகு கொண்டத்து காளியம்மம்ன் திருக்கோவிலில்,   சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான எஸ்.எம்.பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் காளிபாளையம் பொன்னுலிங்கம், பொங்குபாளையம் மூர்த்தி, தொரவலூர் பானு பழனிசாமி, சண்முகம்,வள்ளிபுரம் ஸ்ரீதேவி பழனிச்சாமி, ஈட்டி வீரம்பாளையம் செல்வகுமார், சரவணன், பொங்குபாளையம் துணை தலைவர் கருப்புசாமி,ஒன்றிய பாசறை செயலளார் சந்திரசேகர், வேலுமணி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர்கள் எவரெடிதுரை, சுலக்ஷ்னா, பொடரப்ப கவுண்டர், குமாரவடி வடிவேல், மாணிக்கம், சிதம்பரம்,ஊராட்சி கழக செயலாளர்கள் குருசாமி, வடிவேல், முருகேசன், தங்கராஜ், குமாரசாமி, ராமசாமி, செல்வராஜ்,ஒன்றிய விவசாய அணி செயலாளர் முத்துரத்தினம், பெருமாநல்லூர் விசைத்தறி கூட்டுறவு சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் துரைசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சித்ரா பெரியசாமி, கிருத்திகா ரத்தினசாமி, அண்ணா தொழிற்சங்க ஒன்றிய தலைவர் சுப்பிரமணி, கிளை செயலாளர்கள் வேலுசாமி,மாணிக்கம் மற்றும் எம்.சி.மணி, எம்.எஸ்.விஜயகுமார் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக மக்களுக்கு எண்ணிலடங்கா நலத்திட்டங்களை வழங்கி, தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி நல்லாட்சி புரிந்து வந்துள்ள ஜெயலலிதா தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கை சட்டரீதியாக சந்தித்து விரைவில் வெற்றி காண்பார் என்பது உறுதி...சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ.


ஒரு கட்சித் தலைவரோ, உயர்ந்த பதவி வகிப்பவரோ ஒரு வழக்கில் குற்றவாளியாக கருதப்பட்டு தண்டனை பெறும்போது அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், அபிமானிகளும் உணர்ச்சிவசப்படுதல் என்பது இயல்பு. இந்தியா முழுவதும் இத்தகைய உணர்ச்சி வெளிப்பாடுகள் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு தலைவர்கள் கைதானபோதும், தண்டனைக்கு உள்ளானபோதும் நிகழ்ந்துள்ளன. முன்பு ஒரு முறை தி.மு.க. தலைவரும், பொதுச் செயலாளரும் கைது செய்யப்பட்டபோது திருச்சியில் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. முத்தரசநல்லூரில் குண்டு வெடித்து ஒருவர் பலியான சம்பவங்களும் உண்டு.
தமிழகத்தில் அமைதி நிலவுகிறபோது சட்டம் ஒழுங்கு முற்றிலும் சிதைந்துவிட்டது. அமைதி இழந்துவிட்டது என்று எதிர்க்கட்சித்தலைவர்கள் புலம்பி குற்றம்சாட்டுவது வியப்பாக உள்ளது. ஏனென்றால் இப்படிக் குற்றம் கூறுபவர்கள் முன்பு கைது செய்யப்பட்டபோது திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளை மக்கள் மறந்துவிடவில்லை.
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலிலும் 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ள ஜெயலலிதாவை தேர்தல் களத்தில் சந்தித்து படுதோல்வி அடைந்தவர்கள், மக்கள் அவர்களுக்கு எதிராக அளித்த தீர்ப்பை மறந்துவிட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக பேசி வருகிறார்கள்.
உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் மூலம் பல லட்சம் கோடிகள் ஊழல் செய்து தி.மு.க. மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராஜா, தன் மகள் கனிமொழி எம்.பி. ஆகிய இருவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததையும், இன்னும் 2ஜி வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருவதையும் மறந்துவிட்டு பேசிக் கொண்டிருக்கிறார். தி.மு.க. தலைவர், தி.மு.க. முன்னாள் அமைச்சர்களும், முக்கிய பதவி வகித்தவர்களும் தியாகிகளைப்போல தூய வாழ்க்கை வாழ்ந்தது போன்று தி.மு.க. தலைவர், கருத்து வெளியிட்டிருப்பது மிக மிக வேடிக்கையாக உள்ளது. அதைவிடப் பெரிய வேடிக்கை ‘‘ஊழலின் நிழல் கூட தி.மு.க. மீது படுவதை கலைஞர் விரும்ப மாட்டார்’’ என்ற டாக்டர் ராமதாசின் சமீபத்திய அறிக்கைதான்.
தமிழகத்திற்கு வன்முறை கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது யார் என்பதை இந்த நாடே அறியும். சட்டம் ஒழுங்கு காவல்துறையின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்து வருகிற நிலையில் சட்டம் ஒழுங்கை மேற்கோள் காட்டி மாநில சுயாட்சி பற்றி முழங்கியவர்கள், இன்று மாநில நிர்வாகத்தைக் கவனிக்க மத்திய அரசை அழைக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் மக்கள் மன்றம் தகுந்த பதிலளிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்கும் காவிரி பிரச்சினைக்கும், முல்லைப் பெரியார் பிரச்சினைக்கும், மத்திய அரசை அழைக்காதவர்கள், அண்ணா தி.மு.க. அரசைக் கவிழ்க்க மத்திய அரசை அழைக்கிறார்கள். முதலில் 355 சட்டப்பிரிவை கொண்டு வாருங்கள் என்று கருத்துத் தெரிவித்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர். அடுத்து 356 தானாக வராதா என்ற ஆசையில் பலர் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் படங்களை அகற்ற வேண்டும் என்று அறிக்கை மேல் அறிக்கை வெளியிடுகிறார்கள். ஆனால் கோடானுகோடி தமிழ மக்களின் இதயங்களில் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கிறாரே அதை உங்களால் அகற்ற முடியுமா?
அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நல்லதொரு தீர்ப்பு கிடைக்கப் பெற்று சோதனைகளை வென்று புது எழுச்சியோடு திரும்ப வருவார். அதுவரைக்கும் அனைவரும் அமைதி காப்போம். மக்களைத் தூண்டிவிடுகிற எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு இடம் தராமல் அவற்றை முறியடிப்போம்.
இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.

அம்மா தாக்கல் செய்ய வேண்டிய மனுக்களை, அவர்களுடைய வழக்கறிஞர்கள் குழு கவனித்துக் கொள்ளும் என்பதையும், அம்மாவின் அனுமதியின்றி எவ்வித மனுக்களையும், யாரும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய வேண்டாம்.அண்ணா தி.மு.க. தலைமை நிலையச் செயலாளரும், அமைச்சருமான பழனியப்பன்

ஜெயலலிதாவை தமிழ்நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்றும், அவர் தொடர்ந்து பதவி வகிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக, கர்னாடக உயர்நீதிமன்றங்களில் சிலர் மனு தாக்கல் செய்திருப்பதற்குஅண்ணா தி.மு.க. தலைமை நிலையச் செயலாளரும், அமைச்சருமான பழனியப்பன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளிடையே ஜெயலலிதா மீது தவறான எண்ணம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எதிரிகள் செய்யும் சதிச்செயல் இது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அண்ணா தி.மு.க. தலைமை நிலையச் செயலாளரும், உயர் கல்வித் துறை அமைச்சருமான பி. பழனியப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு முதலமைச்சராக  அம்மா  தொடர்ந்து பதவி வகிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும், பெங்களூர் சிறையில் இருக்கும்  அம்மாவை தமிழ்நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, செய்திகள் நாளிதழ்களில் வெளி வந்துள்ளன.
கண்டனம்
இந்த மனுக்களை யாரோ வேண்டுமென்றே விஷமத்தனமாக, தீய எண்ணத்துடன் தாக்கல் செய்துள்ளனர் என்றும், இதற்கும்  அம்மாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்வதோடு, இதற்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்மா ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், நீதிபதிகளிடையே  அம்மா  மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எதிரிகள் செய்யும் சதிச் செயல் இது என்பதை எடுத்துக் கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.
மேலும்,  அம்மா  தாக்கல் செய்ய வேண்டிய மனுக்களை, அவர்களுடைய வழக்கறிஞர்கள் குழு கவனித்துக் கொள்ளும் என்பதையும்,  அம்மாவின் அனுமதியின்றி எவ்வித மனுக்களையும், யாரும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு பி. பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்குகளிலிருந்து விடுதலையாக வேண்டி ஒன்றிய ஜெயலலிதா பேரவை சார்பில் மடத்துக்குளம் தொகுதி எம்.எல்.ஏ.,சி.சண்முகவேலு தலைமையில், மண்சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தொகுதியில், பிரசித்தி பெற்ற கொழுமம் அருள்மிகு தாண்டேஸ்வரர், அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் அருள்மிகு நடராஜர் ஆகிய கோவில்களில் மக்களை முதல்வர் ஜெயலலிதா வழக்குகளிலிருந்து விடுதலையாக வேண்டி ஒன்றிய ஜெயலலிதா பேரவை சார்பில் மடத்துக்குளம் தொகுதி எம்.எல்.ஏ.,சி.சண்முகவேலு தலைமையிலும், ஒன்றிய பேரவைச் செயலாளர் எஸ்.பி.சிவலிங்கம், ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை, அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், எஸ்.ராஜ்குமார், குமரலிங்கம் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், பேரூர்கழகச் செயலாளர் கே.ஏ.வரதராஜ் ஆகியோர் முன்னிலையில் மண்சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் எம்.ஏ.சுப்பிரமணியம், மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் எஸ்.பழனிச்சாமி, துணைத் தலைவர் ஜி.கே.தண்டபாணி, கொழுமம் ஊராட்சி மன்றத் தலைவர் இந்திராணி, நீலம்பூர் செல்வராஜ், கே.கே.ரவி, கணியூர் காஜாமைதீன்  உள்ளிட்ட அண்ணா தி.மு.க.நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் தலைமையில் சிறப்பு பூஜை



திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டியும்,பொய்வழக்கில் இருந்து மீண்டு வரவும், மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் போலீஸ் லைன் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் பால் குடம் மற்றும் பூவோடு எடுத்தும் நிறைவேற்றுவதாக வேண்டியும், பிரார்த்தனை செய்தும் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி, மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பளையம் மணி, கண்ணப்பன்,அன்பகம் திருப்பதி, மார்கெட் சக்திவேல், வளர்மதி தாமோதரன், சபரீஷ்வரன், மணிகண்டன், ராஜ்குமார், நீதிராஜன், மகளிர் அணி நிர்வாகிகள் கோமதி சம்பத், ருக்குமணி ஆகியோர்கள் உள்பட அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.