திருச்சி
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு துவக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு கொலு
தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் திருச்சி சிங்கார தோப்பில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில்
கொலு கண்காட்சியை திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.ராசா மணி துவக்கி வைத்தார்.
மேலாளர் கங்காதேவி உடன் இருந்தனர் -
கண்காட்சியானது இன்று முதல் வரும் 7ம் தேதி வரை நடைபெறுகிறது
இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக கொலு செட்டுகள் கொண்ட பள்ளி பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள், காகித கூழ் பொம்மைகள், மண் மற்றும் பளிங்கு, மாக்கல், நவரத்தின கற்கலால் ஆன பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் தசாவதார, அஷ்டலட்சுமி செட், கார்த்திகை பெண்கள் செட், விநாயகர், மகாலட்சுமி மற்றும் முருகர், கீதா உபதேச செட்டுகள் விற்பனைக்கு உள்ளது.
மேலும் கல்கத்தா, மணிப்பூர் ராஜஸ்தான், ஒரிசா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தருவிக்கப்பட்ட பொம்மைகளும் விற்பனைக்கு உள்ளது. இக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு தங்கள் வீடுகளில் கொலு வைப்பதற்கு வாங்கிச் சென்றனர்.
நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகளுக்கு 10 சதவீத சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது
பேட்டி : இராசாமணி - மாவட்ட ஆட்சித் தலைவர்