திருச்சி - 31.05.2019
திருச்சியில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளின் பாதுகாப்பு குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.
கோடைவிடுமுறை முடிந்து வருகிற திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வாகனங்களின் தகுதி குறித்த ஆய்வு திருச்சியில் நடைபெற்றது. இதில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு வசதிகள், வேகக் கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவி மற்றும் அவசரகால வழி போன்றவை பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
ஆகஸ்போர்டு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வு முகாமில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், பள்ளி வாகனங்களின் ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முகாமில் மாவட்ட துணை ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேசும்போது பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை குறிப்பிட்ட வேகத்திலேயே இயக்கவேண்டும், பேருந்தில் இருக்கும் தீயணைப்பு கருவிகள் செயல்படுவது குறித்து அறிந்து கொள்ளவேண்டும். பேருந்தில் பழுது ஏதும் ஏற்பட்டால் உடனடியாக தங்களின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதை சரிசெய்ய வேண்டும். பேருந்தில் பயணிக்கும் குழந்தைகள் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து செல்வது ஒவ்வொரு ஓட்டுநரின் கடமை என கூறினார்.
இதில் பள்ளிபேருந்து ஓட்டுநர்களுக்கு பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து தீயணைப்பு துறையினரால் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.