மத்திய மாநில அரசினால் வழங்கப்படும் நிதியை ஸ்ரீரங்கம் மக்களுக்கு முழுமையாகப் பெற்று தந்து ஸ்ரீரங்கத்தை புனித நகரமாக மாற்றுவேன் என அதிமுக வேட்பாளர் கு ப கிருஷ்ணன் தேர்தல் பரப்புரை.
ஜீயபுரம் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் *கு ப கிருஷ்ணன்* நேற்று காலை ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்பகுதியில் உள்ள மக்களிடம் வாக்கு
சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, அவர் பேசுகையில்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா வழியே வந்த எடப்பாடி K. பழனிச்சாமி ஆட்சியை தான் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். மக்கள் எதிர்பார்ப்பது அமைதியான வாழ்க்கையை ரவுடியிசங்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும். நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்ற நிலையில் தான் தமிழகம் உள்ளது .தமிழகத்தை கூறுபோடும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் போராடி வருகிறது.திருச்சி மாவட்டத்தில் கட்சிக்கு தலைமையாக உள்ள கே. என். நேரு 12 ஆண்டு காலம் அமைச்சராக உள்ளார்.அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின்போது அமைச்சராக 5 ஆண்டு காலம் மட்டுமே நான் பொறுப்பேற்றுக் கொண்டேன் .அச்சமயம் 42 லட்சம் மதிப்பிலான மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டது.பின்னர் வந்த திமுக ஆட்சியில் அதற்கு கீழே விசுவநாதன் மருத்துவக்கல்லூரி என பெயர் மட்டும் சூட்டப்பட்டது.திமுக கட்சியில் இருக்கும் ஸ்டாலின் தன்னைத்தானே செயல் தலைவர் என கூறிக்கொள்கிறார்.எதிர்க் கட்சியான திமுக தகுதியை வளர்த்துக் கொண்டு அதிமுகவிடம் போட்டி போடவேண்டும்.மேலூர் மக்களின் அத்தியாவசிய தேவைகளையும் சாலை கழிப்பிடம் மற்றும் பாலம் அமைத்து தரப்படும் எனவும் கூறினார்.அதனைதொடர்ந்துஸ்ரீரங்கம் நெடுந் தெருவில் பிரசார பயணத்தை மேற்கொண்ட வேட்பாளர் மக்களிடம் கூறுகையில் திருவரங்கத்தில் நிலவிவரும் குடிநீர் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படும்.
திருவரங்கத்தை புனித நகரமாக மற்றி மத்திய அரசினால் ஒதுக்கப்படும் நிதியை முழுமையாகப் பெற்று தரப்படும் என்று கூறி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.
இந்த நிகழ்ச்சியல் ஸ்ரீரங்கம் பகுதி கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன்,திருப்பதி,ஒன்றிய கழக செயலாளர்கள்முத்துகருப்பன்,அழகேசன்,ஜெயகுமார்,நடராஜ்செல்வராஜ்,கூட்டனி கட்சி தலைவர்கள்பா.ஜ.க.மாவட்ட தலைவர்ராஜேஷ்,உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.