திருப்பூர் மாநகர் மாவட்ட அ.திமு.க., சார்பில் மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் 67-வது பிறந்தநாளையொட்டி, திருப்பூரில் 100 இடங்களில் 100 வாகனங்கள் மூலம் தலா 1000 பேருக்கு என ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார். திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், அணி செயலாளர்கள் கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, ஆனந்தகுமார், ஸ்டீபன்ராஜ், சீனியம்மாள், கே.என்.சுப்பிரமணியம், அட்லஸ் லோகநாதன், உஷாரவிக்குமார், எஸ்.பி.,என்.பழனிசாமி, கவுன்சிலர்கள் கீதா, சண்முகசுந்தரம், ரத்னகுமார், ஷாஜகான், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.