Nov 1, 2014

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்: மேயர் ராஜன்செல்லப்பா தொடங்கி வைத்தார்











மதுரை மாநகராட்சிக்குட்பட்ட செல்லூர் மற்றும் ஆத்திகுளம் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கும் பணி மாநகராட்சி சார்பில் இன்று நடைபெற்றது. ஆணையாளர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்தப்பணியை, மேயர் ராஜன்செல்லப்பா தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மேயர் ராஜன்செல்லப்பா பேசியதாவது:–
மதுரை மாநகராட்சி பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிகளும் நோய் தடுப்பு சுகாதார பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு பரவுவதற்கான சூழ்நிலை உள்ள காரணத்தினால் தடுப்பு பணி தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சென்ற முறை டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ள பகுதிகளில் இம்முகாம் நடத்தப்படும். அதனடிப்படையில் வார்டு எண்.7 செல்லூர் மற்றும் வார்டு எண்.48 ஆத்திகுளம் ஆகிய வார்டுகளில் பொது மக்கள் நெருக்கமாக உள்ளதால் மதுரை மாநகராட்சி மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர், சுகாதார பணியாளர்கள் ஆசிரியர் கள் சுயஉதவி குழுவினர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் என 550 பேர் வார்டுக்கு 10 குழுக்கள் வீதம் 20 குழுக்கள் டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வீடு வீடாக சென்று களப்பணி மேற்கொண்டுள்ளனர்.
மேலும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள மேல்நிலைத் தொட்டிகளில் அபேட் மருந்து தெளித்தல், கொசுப்புழு உற்பத்தியாகாமல் தடுக்கும் பொருட்டு வீடுகளுக்கு உட்புறம் மற்றும் வெளிபுறப்பகுதிகளில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல், டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதற்குரிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தல், நிலவேம்பு பொடி வழங்குதல் மற்றும் பொது மக்களுக்கு ஆலோசனை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.
இப்பணி இப்பகுதிகளில் இன்றும் நாளையும் மேற் கொள்ளப்படும். மதுரை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக முழு கவனம் செலுத்தி ஒழிப்புபணி மேற்கொள்ளப்படுகிறது. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறி 2012 ஆம் ஆண்டு 857 நபர்களுக்கும், 2013 ஆம் ஆண்டு 57 நபர்களுக்கும், காணப்பட்டது.
தற்போது 2014 ஆம் ஆண்டு 14 நபர்களுக்கு டெங்கு அறிகுறி உள்ளது டெங்கு பரவாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் தொடாந்து நடைபெறும். ஒவ்வொரு வீட்டிற்கும் நிலவேம்பு பொடி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் ஆணையாளர் கதிரவன், துணை மேயர் திரவியம், நகர்நல அலுவலர் யசோதாமணி, உதவி ஆணையாளர்கள் குணாளன், தேவதாஸ், சுகாதார குழு தலைவர் முனியாண்டி, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், மாமன்ற உறுப்பினர் முத்துராஜா, சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், சுகாதார பார்வையாளர்கள், செவிலியர்கள், அபேட் மருந்து ஊற்றும் பணி யாளர்கள் மற்றும் மாநக ராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.