Showing posts with label மாநகராட்சி. Show all posts
Showing posts with label மாநகராட்சி. Show all posts

Oct 16, 2015

சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினர்

http://img.dailythanthi.com/Images/Article/201510120150036304_57-Million-worth-of-Rs-prayer-arpiutayakumar-small_SECVPF.gifவிருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் வழங்கினர்.

பூஜை உபகரணங்கள்

விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்கள் வழங்கும் விழா விருதுநகர் வேலாயுதத்தேவர் பிள்ளையார் கோவில் திருமண மண்டபத்தில் கலெக்டர் ராஜாராமன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் 380 சிறு கோவில்களுக்கு கோவில் பூசாரிகளிடம் அமைச்சர்கள் ஆர்.பி.உதய குமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் பூஜை உபகரணங்களை வழங்கினர். விழாவில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் பேசும் போது தெரிவித்ததாவது:-

தமிழக முதலமைச்சர் சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் 380 சிறு கோவில்களுக்கு வழங்கப்படவுள்ள தூபக்கால், மணி, அகல்விளக்கு மற்றும் தொங்கு விளக்கு அடங்கிய பூஜை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அன்னதான திட்டம்

முதலமைச்சரால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் கோவில் அன்னதானத் திட்டம் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவில்களில் குடமுழுக்கு, கோவில் பராமரிப்பு, தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்தல், போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர். மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கோவில்களுக்கும், கிராமப்புறங்களில் உள்ள 132 கோவில்களுக்கும் திருப்பணி வேலைகள் செய்திட தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 17 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. அறிவித்த திட்டங்கள் மட்டும் அல்லாமல் அனைத்து திட்டங்களையும் முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்கள். இத்தகைய தாயுள்ளம் கொண்ட முதலமைச்சருக்கு நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பணி நிரந்தரம்

விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும் போது தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வருமானம் இல்லாத 10 ஆயிரம் சிறு கோவில்களுக்கு முறையாக பூஜை செய்திட ஏதுவாக ரூ.2.50 கோடி மதிப்பில் பூஜை உபகரணங்கள் வழங்கப்படும் என அறிவித்து தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் ரூ.5.7 லட்சம் மதிப்பில் சிறு கோவில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. கோவில்களில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப் பணியாளராக காலமுறை ஊதியத்தில் வரன்முறை செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் கோவில்களில் பணியாற்றி வந்த 15 பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். நலிவடைந்த கோவில்களில் ஒருகால பூஜையாவது நடைபெற வேண்டும் என்ற உயர்ந்த திட்டத்தின் கீழ் 187 திருக்கோவில்களில் பூஜை நடைபெற்று வருகிறது.

மாத உதவித்தொகை

விருதுநகர் மாவட்டத்தில் பூசாரிகள் நல வாரியத்தில் 2328 கிராமக்கோவில் பூசாரிகள் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். கிராமப்புற பூசாரிகள் ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற 57 பூசாரிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது. ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்ட முதல்வருக்கு நாம் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எம்.பி., எம்.எல்.ஏ.

இந்த விழாவில் விருதுநகர் எம்.பி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் வைகைச்செல்வன், பாண்டியராஜன், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுப்பிரமணியன், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் சாந்திமாரியப்பன், துணைத்தலைவர் மாரியப்பன், யூனியன் தலைவர்கள் கலாநிதி (விருதுநகர்), வேலாயுதம் (சாத்தூர்), ரேவதிகாசிதுரைபாண்டியன் (வெம்பக்கோட்டை), துணைத்தலைவர் மூக்கையா, நகர்மன்ற உறுப்பினர் முகமது நயினார், உதவிஆணையர் ஹரிஹரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சிறு கோவில் பூசாரிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்: அமைச்சர்

2016இல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என செய்தி விளம்பரம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
 அதிமுக பொதுசெயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா, விருதுநகர் மாவட்டச் செயலராக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை அறிவித்தார். இதனையடுத்து அவர் மீண்டும் விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாராக பதவியேற்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது, அதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியது: உண்மையாகவும், விசுவாசமாகவும் கட்சிப்பணியாற்றினால் அதற்கு உரிய இடத்தை முதல்வர் அளிப்பார். அந்த வகையில் என்னை இரண்டாம் முறையாக மாவட்ட செயலராக அறிவித்துக் கட்சிப்பணியாற்றும் வாய்பை முதல்வர் கொடுத்துள்ளார். 2016 இல் தமிழகத்தில் சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் அதிமுக அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலலிதா முதல்வராக பதவியேற்பார் என்றார்.
  நிகழ்ச்சியில் விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் பாண்டியராஜன், வைகைச்செல்வன், மாவட்ட அவைத்தவர்  விஜயகுமார், பொருளாளர் ராஜவர்மன், ஒன்றியச் செயாலர் கருப்பசாமி, திருத்தங்கல் நகரச் செயலர் பொன்சக்திவேல், சிவகாசி நகர் மன்றத்தலைவர் வெ.க.கதிரவன், சாத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலர் சண்முகக்கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   பிறகு, சிவகாசி மற்றும் திருத்தங்கலில் உள்ள தலைவர்களின் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Oct 1, 2015

விருதுநகரில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் புதன்கிழமை வழங்கினார். விருதுநகர் கே.வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளியின் செயலாளர் மதன்மோகன் முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் மா.சாந்தி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கி.கலாநிதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். இதில், நகராட்சி துணைத் தலைவர் மாரியப்பன், நகர செயலாளர் முகமதுநயினார், மாவட்ட அவைத் தலைவர் மற்றும் நகராட்சி உறுப்பினர் ஐ.மருது, நகராட்சி உறுப்பினர்கள் த.அன்னலட்சுமி, தனலட்சுமி, செய்யது இப்ராஹூம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 420 பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இதேபோல், ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 433 பேருக்கு, செளடாம்பிகா மாணவ, மாணவிகள் 69 பேருக்கும், சத்திரரெட்டியாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 73 பேருக்கும், தியாகராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 93 பேருக்கும் மொத்தம் 1088 பேருக்கு ரூ.1.47 கோடியில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.

விருதுநகரில்  மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் புதன்கிழமை வழங்கினார்.
    விருதுநகர் கே.வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளியின் செயலாளர் மதன்மோகன் முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் மா.சாந்தி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கி.கலாநிதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
   நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். இதில், நகராட்சி துணைத் தலைவர் மாரியப்பன், நகர செயலாளர் முகமதுநயினார், மாவட்ட அவைத் தலைவர் மற்றும் நகராட்சி உறுப்பினர் ஐ.மருது, நகராட்சி உறுப்பினர்கள் த.அன்னலட்சுமி, தனலட்சுமி, செய்யது இப்ராஹூம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 420 பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.         இதேபோல், ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 433 பேருக்கு, செளடாம்பிகா மாணவ, மாணவிகள் 69 பேருக்கும், சத்திரரெட்டியாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 73 பேருக்கும், தியாகராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 93 பேருக்கும் மொத்தம் 1088 பேருக்கு ரூ.1.47 கோடியில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.

Dec 22, 2014

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் கலெக்டர் கு.கோவிந்தராஜ் பார்வையிட்டனர்



திருப்பூர், கேத்தனூர் ஊராட்சி பள்ளியில் வைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் கலெக்டர் கு.கோவிந்தராஜ், பல்லடம் எம்.எல்.ஏ. பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், திருப்பூர் துணை மேயர் குணசேகரன், கேத்தனூர் ஊராட்சி தலைவர் ஹரிகோபால் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Dec 15, 2014

அமைச்சர் அவர்களின் தலைமையில்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

புரட்சித்தலைவி,மக்களின் முதலவர் மாண்புமிகு அம்மா அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்ட உள்கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடைபெற இருப்பதால் மாண்புமிகு அமைச்சர் அவர்களின் தலைமையில் மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது ...இதில் எராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ..

Nov 21, 2014

மதுரை மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை :ஸ்டாலின் புகாருக்கு மேயர் ராஜன் செல்லப்பா பதிலடி



   மதுரையில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக பொருளாளர் முக ஸ்டாலின் ,தானும்,குழந்தைவேலுவும் மேயராக இருந்தபோது அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் நடைபெற்ற மேயர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசி இருக்கிறோம். அப்போது தி.மு.க.வின் எண்ணங்கள், கலைஞரின் கொள்கைகள் பற்றி பேசவாய்ப்பு கிடைத்தது.
சென்னை மேயராக இருந்தபோது, தான் செய்த சாதனைகள், திட்டங்கள், நிறைவேற்றப்பட்ட பணிகள் பற்றியெல்லாம்  எடுத்து கூறினார்கள். குழந்தைவேலு மேயராக இருந்தபோது, மதுரையில் சுற்றுவட்டச்சாலை, மேம்பாலங்கள், பாதாள சாக்கடை இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் அவர் காலத்தில் நிறைவேற்றப்பட்டன.இப்போது நடைபெறும் ஆட்சியில், இதுபோன்ற பொதுப்பணிகள் நடைபெற்று இருக்கிறதா? என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். என கேள்வி எழுப்பினார் .இதற்கு பதில் அளிக்கிற வகையில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை மேயர் ராஜன் செல்லப்பா ,திமுக கடந்த 15 ஆண்டு காலம் மாநகராட்சியில் பதவி வகித்தும் ஒரு நன்மை கூட மதுரை மக்களுக்கு செய்யவில்லை ,இப்போது அதிமுக அரசின் மீது தவறான புகார் கூறுகின்ற முக ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போதும் அவரது அண்ணன் மத்திய அமைச்சராக இருந்த போது மதுரைக்கு செய்தது என்ன என்று கேள்வி எழுப்பினார்.அப்போது நிறைவேற்றப்படமடாமல் அரை குறையாய் விடப்பட்ட மேம்பால திட்டங்களை நிறைவேற்றியது அதிமுக ஆட்சி தான்.அவர்கள் 600 கோடியில் திட்டங்களை நிறைவேற்றியதாக சொல்வதெல்லாம் உண்மைக்கு மாறானது .அந்த திட்டத்திற்கு மாநகராட்சி நிதியை பயன்படுத்தாத காரணத்தால் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 250 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி தந்ததாக குறிப்பிட்டார் .மேலும் மழையால் சேதமடைந்துள்ள சாலைகள் விரைவில் சீரமைக்கபப்டும் .விதிமுறை மீறிய கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கபப்ட்டு வருகிறது .கிருதுமால் நதி வாய்க்கால் தோண்டுகிற பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார் .பேட்டியின் போது துணை மேயர் திரவியம் ,எம் எல் ஏ க்கள் சுந்தர்ராஜன் ,முத்துராமலிங்கம் ,மண்டல தலைவர் சாலைமுத்து,சுகந்தி அசோக் ,வழக்கறிஞர் ரமேஷ் ,நிலையூர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர் 

Nov 12, 2014

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக– திமுக மோதல்

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக– திமுக மோதல்
மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில் இன்று நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் கதிரவன், துணை மேயர் திரவியம், மண்டல தலைவர்கள் ராஜபாண்டியன், சாலைமுத்து, ஜெயவேல் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியவுடன் மேயர் ராஜன் செல்லப்பா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும். மதுரை மாநகராட்சியில் 11 அம்மா உணவகங்களை திறந்த மக்களின் முதல்வர் அம்மாவுக்கு கோடான கோடி நன்றி போன்ற தீர்மானங்களை வாசித்தார்.
அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். அதனை தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை செய்ததாக தி.மு.க. தலைவர் கருணாநிதியை கண்டித்து மேயர் ராஜன்செல்லப்பா தீர்மானங்களை வாசித்தார். அப்போது அங்கிருந்த தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து சபையில் இருந்து வெளியேறிய தி.மு.க. கவுன்சிலர்கள் சிறிது நேரம் கோஷமிட்டு மீண்டும் அவைக்கு வந்தனர்.
மாநகராட்சி கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:–
ராஜபாண்டியன், மேற்கு மண்டலத் தலைவர்:– மதுரையில் பல்வேறு இடங்களில் கொசுத் தொல்லைகள் அதிகமாக உள்ளது. இந்நாட்டு மன்னர்கள் போல கொசுக்கள் வலம் வருகின்றன. மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும். மீன் மார்க்கெட்டை விராட்டி பத்துக்கு மாற்றியதை வரவேற்கிறேன். ஆரப்பாளையம் முதல் அருள்தாஸ்புரம் வரை தரைப்பாலம் அமைப்பதற்கு மாநகராட்சிக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆரப்பாளையம் பஸ் நிலையம், டி.பி.ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகை ஆற்றில் கோச்சடை, ஆரப்பாளையம், குருவிக்காரன்சாலை ஆகிய இடங்களில் தடுப்பனைகள் அமைத்து நகர் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண்டலங்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள திட்டப்பணிகளை மண்டல அலுவலக உதவி கமிஷனர்களே செய்யும் வகையில் அதிகாரம் வழங்க வேண்டும்.
ஜெயவேல், வடக்கு மண்டலத்தலைவர்:– வடக்கு மண்டல பகுதியில் குடிநீர் பிரச்சினை அதிகரித்து உள்ளது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும். மேலும் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்தால் போதும்.
மேயர்:– இது குறித்து உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
சாலைமுத்து, தெற்கு மண்டலத்தலைவர்:– மதுரை மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினையை போக்கும் வகையில் மக்களின் முதல்வர் அம்மா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் பல்வேறு திட்டங்களை நகர மக்களுக்கு அம்மா வழங்கி உள்ளார். ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது குடும்பத்தினருக்காக ஆட்சி நடத்தினார். மதுரையில் இருந்த மு.க.அழகிரி சட்டத்தை தன் கையில் எடுத்து அராஜகம் செய்தார்.
அப்போது அவையில் இருந்த தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்களும் எழுந்து பேசினர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. உடனே மேயர் ராஜன்செல்லப்பா குறுக்கிட்டு அமைதி காக்கும்படி கவுன்சிலர்களை கேட்டுக் கொண்டார். ஆனாலும் தொடர்ந்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அப்போது பேசிய மேயர் தி.மு.க. கவுன்சிலர்கள் அழகிரிக்கு எதிராக பேசியதால் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்களே? நீங்கள் கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வா, அல்லது அழகிரி தலைமையிலான தி.மு.க.வா என்பதை விளக்க வேண்டும் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் மீண்டும் வெளிநடப்பு செய்தனர்.
வழக்கமாக ஒவ்வொரு மாநகராட்சி கூட்டத்திலும் கறுப்பு சட்டை அணிந்து வந்த தி.மு.க. கவுன்சிலர்கள் இன்றைய கூட்டத்தில் வெள்ளைச்சட்டை அணிந்து வந்தனர். மேற்கு மண்டலத் தலைவர் ராஜபாண்டியன் கறுப்பு சட்டை அணிந்து கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், மக்களின் முதல்வர் அம்மா, முதல்வராக இல்லாததால் அ.தி.மு.க.வினருக்கு கறுப்பு நாள், அதை உணர்த்தும் வகையில் கறுப்பு சட்டை அணிந்துள்ளேன் என்றார்

Nov 1, 2014

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்: மேயர் ராஜன்செல்லப்பா தொடங்கி வைத்தார்











மதுரை மாநகராட்சிக்குட்பட்ட செல்லூர் மற்றும் ஆத்திகுளம் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கும் பணி மாநகராட்சி சார்பில் இன்று நடைபெற்றது. ஆணையாளர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்தப்பணியை, மேயர் ராஜன்செல்லப்பா தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மேயர் ராஜன்செல்லப்பா பேசியதாவது:–
மதுரை மாநகராட்சி பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிகளும் நோய் தடுப்பு சுகாதார பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு பரவுவதற்கான சூழ்நிலை உள்ள காரணத்தினால் தடுப்பு பணி தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சென்ற முறை டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ள பகுதிகளில் இம்முகாம் நடத்தப்படும். அதனடிப்படையில் வார்டு எண்.7 செல்லூர் மற்றும் வார்டு எண்.48 ஆத்திகுளம் ஆகிய வார்டுகளில் பொது மக்கள் நெருக்கமாக உள்ளதால் மதுரை மாநகராட்சி மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர், சுகாதார பணியாளர்கள் ஆசிரியர் கள் சுயஉதவி குழுவினர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் என 550 பேர் வார்டுக்கு 10 குழுக்கள் வீதம் 20 குழுக்கள் டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வீடு வீடாக சென்று களப்பணி மேற்கொண்டுள்ளனர்.
மேலும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள மேல்நிலைத் தொட்டிகளில் அபேட் மருந்து தெளித்தல், கொசுப்புழு உற்பத்தியாகாமல் தடுக்கும் பொருட்டு வீடுகளுக்கு உட்புறம் மற்றும் வெளிபுறப்பகுதிகளில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல், டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதற்குரிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தல், நிலவேம்பு பொடி வழங்குதல் மற்றும் பொது மக்களுக்கு ஆலோசனை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.
இப்பணி இப்பகுதிகளில் இன்றும் நாளையும் மேற் கொள்ளப்படும். மதுரை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக முழு கவனம் செலுத்தி ஒழிப்புபணி மேற்கொள்ளப்படுகிறது. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறி 2012 ஆம் ஆண்டு 857 நபர்களுக்கும், 2013 ஆம் ஆண்டு 57 நபர்களுக்கும், காணப்பட்டது.
தற்போது 2014 ஆம் ஆண்டு 14 நபர்களுக்கு டெங்கு அறிகுறி உள்ளது டெங்கு பரவாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் தொடாந்து நடைபெறும். ஒவ்வொரு வீட்டிற்கும் நிலவேம்பு பொடி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் ஆணையாளர் கதிரவன், துணை மேயர் திரவியம், நகர்நல அலுவலர் யசோதாமணி, உதவி ஆணையாளர்கள் குணாளன், தேவதாஸ், சுகாதார குழு தலைவர் முனியாண்டி, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், மாமன்ற உறுப்பினர் முத்துராஜா, சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், சுகாதார பார்வையாளர்கள், செவிலியர்கள், அபேட் மருந்து ஊற்றும் பணி யாளர்கள் மற்றும் மாநக ராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.