Mar 19, 2021

திருச்சி அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்சோதி தேர்தல் வாக்குறுதி

 திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சமயபுரம் பகுதியில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற வேட்பாளர் பரஞ்ஜோதி இன்று சமயபுரத்தில் பிரச்சாரத்தை துவங்கினார். கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் ஒவ்வொரு நாளும் நிர்வாகிகளை சந்தித்து வந்த நிலையில் இன்று முதல் முதலாக சமயபுரத்தில் பிரச்சாரத்தை துவங்கினார். பிரச்சாரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய்,  வருடத்திற்கு இலவசமாக 6 சிலிண்டர், இலவச சோலார் சமையல் அடுப்பு இலவசம் அம்மா வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என பல்வேறு நலத் திட்டங்களை மாண்புமிகு முதல்வர் அறிவித்ததை அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்ஜோதி பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 


மேலும் மண்ணச்சநல்லூர் தேர்தல் வாக்குறுதியாக

அய்யம்பாளையம் ஏவூர் ஆமூர் குணசீலம் ஊராட்சியில் சுமார் 2,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் காவிரியில் நிரந்தர கொரம்பு அமைக்க பாடுபடுவேன்



காவேரி உப்பாறு நீர்த்தேக்கம் திட்டம் செயல்படுத்தப்படும்


கொடுந்துறை வாய்க்கால் காவிரி உபரி நீரை சித்தாம்பூர் ஏரிக்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்


மணச்சநல்லூர் சட்டமன்ற பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டுவரப்படும்


விவசாயிகள் புஷ்ப வியாபாரிகள் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நொச்சியத்தில்  இருந்து

ஸ்ரீரங்கத்திற்கு கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைக்கப்படும்


மணச்சநல்லூர் சட்டமன்ற பகுதியில் இளைஞர்களுக்காக மிகப்பெரிய பல்லாக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்


கரட்டாம்பட்டி ஊராட்சியில் அரசு மாணவர் மாணவிகள் விடுதி அமைத்து தரப்படும்



மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் அமைத்து தரப்படும்


மண்ணச்சநல்லூர் சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உரிமையியல் குற்றவியல் நீதிமன்றம் அமைத்து தரப்படும்


சிறுகனூர் பகுதியில் அரசு மருத்துவமனை அமைத்து தரப்படும்


கோணலை ஏரியின் நீர் வரத்து நீர் கொண்டு வரும் வகையில் புதிய நீர் வழித்தடம் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைத்து தரப்படும்


மண்ணச்சநல்லூர் போருராட்சி ச கண்ணனூர் பேரூராட்சி பகுதியில் பாதாள சாக்கடை முடிவடைந்து அனைத்து பகுதிகளிலும் சாலை வசதி செய்து தரப்படும்



மணச்சநல்லூர் பகுதியில் உள்ள அனைத்து அரிசி ஆலைகள் நல்லநிலையில் இயங்குவது தொடர்பான அனைத்து நடவடிக்கையும் எடுத்து தொழிலாளர்கள் நலன் காக்கப்படும்



அண்ணாநகர் புள்ளம்பாடி வாய்க்கால் பாலம் நரசிங்கமங்கலம் சேனியர் கள்ளிகுடி புள்ளம்பாடி வாய்க்கால் பாலம் மாணிக்கபுரம் பெருவளை வாய்க்கால் பாலம் மூன்று பழைய பாலம் இடித்து புதிதாக பேருந்து செல்லும் வகையில் அமைத்து தரப்படும்


இந்திரா நகர் வா உ சி நகர் மற்றும் மெயின் ரோடு பகுதிகளுக்கு குடிநீர் சுமார் ஒரு லட்சம் கன அளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தனலட்சுமி நகரில் அமைத்து தரப்படும்


திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து பேருந்துகளும் பக்தர்கள் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோயிலுக்கு செல்லும் வகையில் ஊருக்குள் செல்லுமாறு பேருந்து நிலையம் விரிவு படுத்தப்படும்


மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள கீழ்நிலை நீர் தேக்கத் தொட்டி மண்ணச்சநல்லூர் பகுதியில் 7 லட்சம் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் கொள்ளிடத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் வரை 600 மீட்டர் கேஸ்டில் பைப் லைன் அமைத்து தரப்படும்



உளுந்தம் குடி பெருவளை வாய்க்கால் மட்டும் புள்ளம்பாடி வாய்க்காலில் இரண்டு பாலம் அமைத்து தரப்படும்

மேல சீதேவி மங்கலம் இரண்டு பாலம் மற்றும் பங்குனி வாய்க்காலில் கொங்காளில்  முத்தையன் கோவில் பாலம் ஒன்று அமைத்து தரப்படும் சமயபுரம் நடைபயணம் வரும் பக்தர்களுக்கு நடைபாதை அமைத்து தரப்படும் என அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்சோதி மண்ணச்சநல்லூர்  சட்டமன்ற தொகுதி தேர்தல் வாக்குறுதிகளாக கூறியுள்ளார்


இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் சமயபுரம் சின்னையன் ஒன்றிய செயலாளர் ஆதாளி ஜெயக்குமார் ஆமூர் ஜெயராமன் நகரச் செயலாளர் மண்ணச்சநல்லூர் துறை சக்திவேல் சமயபுரம் சம்பத் மற்றும்  பா.மா.கா தா.மா.ககூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டு சமயபுரம் பகுதியில் தீவிர பிரசாரத்தில்   ஈடுபட்டனர்.