Mar 23, 2021

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட கோப்பு பகுதியில் குளிர் வசதியுடன் திருமண மண்டபம் கு.ப.கிருஷ்ணன்

 கூட்டுறவு கடன், நகைக்கடன் மற்றும் சுயஉதவிக்குழு கடனை தள்ளுபடி செய்த அம்மாவின் நல்லாட்சித் தொடர ஆதரிப்பீர் இரட்டை இலையை - ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர்  குப கிருஷ்ணன்


தேர்தல் பிரச்சாரம் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரு.குப கிருஷ்ணன் அவர்கள் 7ஆம் நாள் பிரச்சாரமான இன்று அந்தநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரிக்கல்மேடு, ஒத்தக்கடை,  போதாவூர்,  புலியூர், வியாழன்மேடு, கணேசபுரம், போசம்பட்டி, மணியன் நகர், எட்டரை,  மஞ்சாங்கோப்பு, முள்ளிக்கரும்பூர், முல்லைநகர், கோப்பு, அயிலாப்பேட்டை, குழுமணி, தச்சக்குடி பேரூர், ஏகிரிமங்கலம், சாத்தனூர்,     சீராத்தோப்பு, மருதாண்டாக்குறிச்சி, ஆளவந்தான்நல்லூர், மல்லியம்பத்து, பெருங்குடி, செங்கதிர்சோலை போன்ற பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

இன்று காலை அந்தநல்லூர்  ஒன்றியத்தில் உள்ள போதாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாக்குகள் சேகரித்த பொழுது ஏராளமான பெண்கள் அவருக்கு கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்த பொதுமக்களை பார்த்து அதிமுக அரசு செய்துள்ள சாதனைகளை விளக்கி கூறி வாக்குகளை சேகரித்தார்.  அதனைத் தொடர்ந்து இனாம்புலியூர் ஊராட்சிக்கு சென்று  அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு  செல்லும்போது அந்த வழியில் உள்ள முதலைப்பட்டியில் மல்லிகை தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தவர்களிடம் சென்று கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்த அவர், மழை மற்றும் குளிர் காலங்களில் மல்லிகை பூ உற்பத்தியைப் பெருக்குவதற்கு “வெப்பமூட்டி குடில்” அமைத்து தரப்படும் எனவும் அயல்நாடுகளில் இருந்து இயந்திரம் இறக்கி பூ கட்டுவதற்கு வழிவகை செய்து தரப்படும் என்றும் மல்லிகை பூவில் இருந்து செண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இத்தொகுதியில் அமைக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார், அதனை தொடர்ந்து வியாழன்மேடு, எட்டரை, கோப்பு, குழுமணி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சென்று பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.  


அப்பொழுது 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக மாற்றி தருவோம் எனவும், குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய் 1500 வங்கி கணக்கில் செலுத்துவோம் எனவும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்குவோம் என்றும் தெரிவித்தார், அதேபோல திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 8 கிராம் தங்கத்துடன் 60 ஆயிரம் ரூபாய் அம்மா அரசால் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். 

மேலும், அவர் கூறுகையில் ஸ்ரீரங்கம் தொகுதி மாண்புமிகு அம்மா அவர்கள் நின்று வென்ற தொகுதி, அம்மா வெற்றிபெற்ற பிறகு இந்த தொகுதியில் பல்வேறு நலதிட்டங்களை கொண்டு வந்தார்கள். அம்மாவின் மறைவுக்கு பிறகு ஆட்சி செய்து கொண்டு இருக்கும் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள், வறட்சி நிவாரணம் கொடுத்தார்கள், நம்முடைய டெல்டா பகுதியை பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்கள், இந்த வருடம் நல்ல மழை பெய்து வாழை, நெல் பயிர்கள் எல்லாம் நன்றாக இருந்தது. அறுவடை நேரத்தில் கனமழை பெய்து நெற்பயிர் எல்லாம் அழுகி வீணாகி விட்டது. எனவே, கருணை உள்ளம் கொண்ட நம்முடைய விவசாய  முதலமைச்சர் அவர்கள், விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கியிருந்த விவசாய கடனை எல்லாம் தள்ளுபடி செய்தார், அதோடு 6 பவுன் வரை வாங்கிய நகைக்கடன்களையும், சுயஉதவிகுழுக்கள் பெற்றிருந்த கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்துள்ளார்.

அதேபோல பம்புசெட்டிற்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் தந்து கொண்டு இருப்பதும் மாண்புமிகு அம்மாவின் அரசு, அதேபோல பெண்களின் சுமையை குறைக்க மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி அனைத்தையும் விலையின்றி அளித்ததும், வரும் காலத்தில் விலையில்லா வாஷிங்மிஷன், விலையில்லா 6 சிலிண்டர் வழங்க இருப்பதும் மாண்புமிகு அம்மாவின் ஆட்சிதான், அதேபோல ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டிற்கு 7500 ரூபாயும் தரஇருப்பதும் மாண்புமிகு எடப்பாடியார் அரசுதான்.

மாணவர்களை கொடிய கொரோனா வைரஸ்சில் இருந்து, மாணவர்களை காப்பாற்ற “ஆல்பாஸ்” போட்டவரும் நம்முடைய எடப்பாடியார் தான், அதேபோல மாணவர்கள் படிக்கும் போது பெற்ற கல்வி கடனை தள்ளுபடி செய்ததும் நம்முடைய எடப்பாடியார் தான். எனவே இப்படிப்பட்ட நல்லாட்சி தொடர நீங்கள் எல்லாம் தொடர்ந்து புரட்சித்தலைவரின் சின்னமாம் இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து என்னை பெறுவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். 

அப்போது பனையபுரம் கர்ணன் ஸ்ரீரங்கம் டைமன் திருப்பதி ஒன்றிய கழக செயலாளர்கள் அழகேசன், நடராஜ், முத்துகருப்பண், ஜெயக்குமார் மற்றும்   பேரூர் கண்ணதாசன் கூட்டனி கட்சியை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் உடன் சென்றனர்.

திருச்சி ஜீயபுரம் மல்லிகை உற்பத்தியை பெருக்க வெப்பமண்டல குடில் அமைத்து தரப்படும் என தேர்தல் பரப்புரையில் கு.ப .கிருஷ்ணன் வாக்குறுதி

 மழை மற்றும் குளிர் காலங்களில் மல்லிகை உற்பத்தியை பெருக்க வெப்பமண்டல குடில் அமைத்து தரப்படும் என தேர்தல் பரப்புரையில்  கு.ப .கிருஷ்ணன் வாக்குறுதி.


ஜீயபுரம், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு.ப கிருஷ்ணன் கடும் வெயிலில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.நேற்று காலை அந்தநல்லூர்  ஒன்றியத்தில் உள்ள போதாவூர், பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார் அப்போது முதலில் கீரிக்கல்மேடு  பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி போதாவூர் சென்றபோது ஏராளமான பெண்கள் அவருக்கு கும்ப மரியாதையுடன்  வரவேற்றனர் பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து அதிமுக அரசு செய்துள்ள சாதனைகளை விளக்கி கூறி வாக்குகள் சேகரித்தார்.  அதனைத் தொடர்ந்து இனாம்புலியூர் ஊராட்சிக்கு சென்று  அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு  சென்றபோது  அந்த வழியில் உள்ள மல்லிகை தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தவர்களிடம் சென்று கலந்துரையாடி அவர்களின் குறைக்க கேட்டறிந்த அவர், மழை மற்றும் குளிர் காலங்களில் மல்லிகை  பூ உற்பத்தியைப் பெருக்கவதற்கு வெப்பமூட்டி குடில் அமைத்து தரப்படும்.மேலும் அயல்நாடுகளில் இருந்து இயந்திரம் இறக்கி பூ கட்டுவதற்கு வழிவகை செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்அதனை தொடர்ந்து வியாழன்மேடு,எட்டரை,கோப்பு,குழுமணி,உள்ளிட்ட்பல.வேறு இடங்களுக்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சென்று,

100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக மாற்றி தருவோம், குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய்  1500 வங்கி கணக்கில் செலுத்துவோம்,வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் இலவசம், திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மேலும் 50 ஆயிரத்திலிருந்து  60 ஆயிரம் ரூபாய் உயர்தியது என்ற அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி அந்தநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

 அப்போது பனையபுரம் கர்ணன் ஸ்ரீரங்கம் டைமன் திருப்பதி ஒன்றிய கழக செயலாளர்கள் அழகேசன், நடராஜ்,முத்துகருப்பண், ஜெயக்குமார் மற்றும் பேரூர் கண்ணதாசன் கூட்டனி கட்சியை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் சென்றனர்

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு ப கிருஷ்ணன் எனது வெற்றி உறுதிசெய்யப்பட்டது என பேச்சு

 உய்யக்கொண்டான் வாய்க்காலை தூர் வாரி அல்லித்துறையில் உள்ள எம்ஜிஆர் சிலை வரை ஒருவழி சாலையாக மாற்றி தரப்படும் என தேர்தல் வாக்குறுதி  ஸ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கு ப கிருஷ்ணன்  அறிவிப்பு


தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஸ்ரீரங்கம் தொகுதியில்  கு ப  கிருஷ்ணன் தொடர்ந்து தேர்தல்  பிரச்சார பயணத்தை மேற்கொண்டு உள்ளர். இதன் ஒரு பகுதியாக மணிகண்டம் ஒன்றியத்திலுள்ள 'நாச்சிகுறிச்சி சோமரசம்பேட்டை அல்லித்துறை அதவத்தூர் தாயனூர் புங்கனூர் குமாரவயலூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.அப்போது அவர் கூறுகையில் 


மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி சாலை வசதி கழிவுநீர் வசதி முறையாக செய்து தரப்படும்.மேலும் மணிகண்டம் ஒன்றிய பகுதியை கல்விக்கூடம் நிறைந்த பகுதியாக மாற்றப்பட்டும் , மேலும் போதாவூரில் அமைந்திருக்கும் தேசிய வாழை  ஆராய்ச்சி மையம் அதிமுக ஆட்சியில்நான் அமைச்சராக இருக்கும்போது அமைக்கப்பட்டது என்று கூறினார்.நாச்சிகுறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பொம்மணி சமுத்திரம் காளியம்மன் கோவில் அருகில் வைக்கப்பட்டிருந்த  புரட்சித் தலைவர்  MGR , புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

அப்போது விவசாயிகளின் முக்கிய பாசன வாய்க்காலான உய்யக்கொண்டான் வாய்க்காலை தூர் வாரிகரைகள் உயர்த்தப்படும‌்

அல்லித்துறை,   சோமரசம்பேட்டை, உய்யகொண்டான் திருமலை, புத்தூர்4 ரோடு வரை உள்ள  பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி கல்லூரி 

மாணவர்களுக்குமட்டுமல்லாதுபொது மக்களுக்கும் பெரும்சிரம்மாக உள்ளது. எனவே உய்யக்கொண்டான் வாய்க்காலை தூர் வாரி அல்லித்துறையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை வரை ஒருவழி சாலையாக மாற்றி தரப்படும்.அப்படி  மாற்றினால் போக்குவரத்துநெரிசல் முற்றிலும் குறையும் என்றுகூறினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் முத்துகருப்பண்,ஜெயகுமார்அழகேசன்,,பாரதியஜனதா கட்சியின்மண்டல பொறுப்பாளர்.ராஜேந்திரன்,பாமகமாவட்ட செயலாளர்சரவணன்  உள்ளிட்ட பலர். கலந்து கொண்டனர்.

திருச்சி அதிமுக வேட்பாளர் நொச்சியம் பகுதியில் பிரச்சாரம்

 திருச்சி அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்சோதி


நொச்சியம் அதன் பகுதிகளில் பிரச்சாரம் முதல்வர் எடப்பாடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய், வருடத்திற்கு இலவசமாக 6 சிலிண்டர், இலவச சோலார் சமையல் அடுப்பு இலவசம் அம்மா வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என பல்வேறு நலத் திட்டங்களை மாண்புமிகு முதல்வர் அறிவித்ததை அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்ஜோதி பொதுமக்களிடையே கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் மண்ணச்சநல்லூர் தேர்தல் வாக்குறுதியாக

அய்யம்பாளையம் ஏவூர் ஆமூர் குணசீலம் ஊராட்சியில் சுமார் 2,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் காவிரியில் நிரந்தர கொரம்பு அமைக்க பாடுபடுவேன்

காவேரி உப்பாறு நீர்த்தேக்கம் திட்டம் செயல்படுத்தப்படும்

கொடுந்துறை வாய்க்கால் காவிரி உபரி நீரை சித்தாம்பூர் ஏரிக்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டுவரப்படும்

விவசாயிகள் புஷ்ப வியாபாரிகள் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நொச்சியத்தில் இருந்து

ஸ்ரீரங்கத்திற்கு கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைக்கப்படும்

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற பகுதியில் இளைஞர்களுக்காக மிகப்பெரிய பல்லாக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்

கரட்டாம்பட்டி ஊராட்சியில் அரசு மாணவர் மாணவிகள் விடுதி அமைத்து தரப்படும்

மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் அமைத்து தரப்படும்

மண்ணச்சநல்லூர் சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உரிமையியல் குற்றவியல் நீதிமன்றம் அமைத்து தரப்படும்

சிறுகனூர் பகுதியில் அரசு மருத்துவமனை அமைத்து தரப்படும்

கோணலை ஏரியின் நீர் வரத்து நீர் கொண்டு வரும் வகையில் புதிய நீர் வழித்தடம் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைத்து தரப்படும்


மண்ணச்சநல்லூர் போருராட்சி ச கண்ணனூர் பேரூராட்சி பகுதியில் பாதாள சாக்கடை முடிவடைந்து அனைத்து பகுதிகளிலும் சாலை வசதி செய்து தரப்படும்



மணச்சநல்லூர் பகுதியில் உள்ள அனைத்து அரிசி ஆலைகள் நல்லநிலையில் இயங்குவது தொடர்பான அனைத்து நடவடிக்கையும் எடுத்து தொழிலாளர்கள் நலன் காக்கப்படும்



அண்ணாநகர் புள்ளம்பாடி வாய்க்கால் பாலம் நரசிங்கமங்கலம் சேனியர் கள்ளிகுடி புள்ளம்பாடி வாய்க்கால் பாலம் மாணிக்கபுரம் பெருவளை வாய்க்கால் பாலம் மூன்று பழைய பாலம் இடித்து புதிதாக பேருந்து செல்லும் வகையில் அமைத்து தரப்படும்


இந்திரா நகர் வா உ சி நகர் மற்றும் மெயின் ரோடு பகுதிகளுக்கு குடிநீர் சுமார் ஒரு லட்சம் கன அளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தனலட்சுமி நகரில் அமைத்து தரப்படும்


திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து பேருந்துகளும் பக்தர்கள் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோயிலுக்கு செல்லும் வகையில் ஊருக்குள் செல்லுமாறு பேருந்து நிலையம் விரிவு படுத்தப்படும்


மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள கீழ்நிலை நீர் தேக்கத் தொட்டி மண்ணச்சநல்லூர் பகுதியில் 7 லட்சம் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் கொள்ளிடத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் வரை 600 மீட்டர் கேஸ்டில் பைப் லைன் அமைத்து தரப்படும்

உளுந்தம் குடி பெருவளை வாய்க்கால் மட்டும் புள்ளம்பாடி வாய்க்காலில் இரண்டு பாலம் அமைத்து தரப்படும்


மேல சீதேவி மங்கலம் இரண்டு பாலம் மற்றும் பங்குனி வாய்க்காலில் கொங்காளில் முத்தையன் கோவில் பாலம் ஒன்று அமைத்து தரப்படும் சமயபுரம் நடைபயணம் வரும் பக்தர்களுக்கு நடைபாதை அமைத்து தரப்படும் என அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்சோதி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் வாக்குறுதிகளாக கூறியுள்ளார்


மேலும் அவர் கூறுகையில் தேர்தல் நேரத்தில் வியாபாரிகள் வருவார்கள் போவார்கள். பணத்தை மட்டுமே நம்பி அவர்கள் தேர்தல் களத்திற்கு வந்துள்ளார்கள் . நான் மக்களாகிய உங்களை நம்பி வந்திருக்கிறேன். மக்களுக்காக நான் பணியாற்றியதால் 5வது முறையாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது போட்டியிடுகிறேன். அதிமுக எனக்கு இத்தனை வாய்ப்பு கொடுக்கும் அளவிற்கு எனக்கு என்ன பலம் என்று கேட்டால், தொண்டர்களுடன் நான் நெருங்கி பழகுவதே என் பலம். பொதுமக்கள் குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பதுதான் எனது பலம். கோடிக்கணக்கான பணத்தை கொண்டு எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்துடன் வந்துள்ள எதிர்கட்சி வேட்பாளரையும் என்னையும் ஒப்பிட்டு பாருங்கள். உங்களுக்காக பணியாற்றுபவர் யாராக இருக்கும் என்று சீர்துாக்கி பாருங்கள். என்னை எளிதில் நீங்கள் அணுக முடியும். எதிர்கட்சிகாரர்களின் காம்பவுண்ட் கேட்டை கூட நீங்கள் நெருங்க முடியாது. இப்பகுதியில் குடியிருக்கும் நரிகுறவர்களுக்கு பட்டா வழங்கிட முயற்சி செய்வேன். என்று அவர் பேசினார்.


பிரச்சாரத்தின் போது மாவட்ட துணைச் செயலாளர் சின்னையன், மாவட்ட முன்னாள் அமைச்சர் பூனாட்சி, அம்மா பேரவை செயலாளர் மற்றும் மாவட்ட ஊராட்சிக் அமைச்சருமான அய்யம்பாளையம் ரமேஷ், மாவட்ட மாணவரணி மற்றும் திருப்பஞ்சலி கூட்டுறவு வங்கி தலைவர் அறிவழகன், ஒன்றிய செயலாளர்கள்

ஜெயக்குமார், ஆதாளி ஆமூர் ஜெயராமன், நகர செயலாளர் சம்பத் துரை, ராஜசேகர் மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், முன்னாள் கவுன்சிலர் மோகன்ராஜ், நாகமணி, திருப்பஞ்சலி ஊராட்சி மன்றத் தலைவர் தியாகராஜன், கல்பான ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், சிறுவளை ஊராட்சி மன்ற தலைவர் லதா, கதிர்வேல் கொரியர் சரவணன், எதுமலை விமலா, முன்னாள் ஒன்றிய துணைச் சேர்மன் வெற்றிச்செல்வி மற்றும் கூட்டணி கட்சிகளான கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்சோதி பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.