அனல் பறக்கும் பிரச்சாரத்தில் திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு அதிமுக வேட்பாளர் நிர்மலா மேரி ஆபிரகாம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 46 வது வார்டில் அதிமுக சார்பில் நிர்மலா மேரி ஆபிரகாம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்து தனது வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் நிர்மலா மேரி.
அந்தவகையில் இன்று தனது 46 வது வார்டுக்குட்பட்ட நேரு தெரு, சாலமன் தெரு, கருதசாமி நகர், எம்ஜிஆர் நகர், ஜே ஜே நகர், உள்ளிட்ட பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று தனது தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிப்பின் போது பொன்மலை பகுதி அவைத்தலைவர் சாமிகண்ணு, தெற்கு மாவட்ட அம்மா பேரவை பொறுப்பாளர் TT. கிருஷ்ணன், பகுதி துணை செயலாளர் கொட்டப்பட்டு பரமசிவம், 46 வது வட்ட செயலாளர் MRV. நாகராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பிரசன்ன குமார், அவைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, பிரதிநிதிகள் அந்தோணி ராஜ், லூர்து மேரி என்கிற பத்மா இந்திரா, வாசுகி, உஷா உட்பட வட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.