ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி திருப்பூர் அண்ணா தி.மு.க.வினர் யாகம்,60 அடி உயர வீர பத்திரகாளியம்மனுக்கு பாலாபிஷகம
அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன் பங்கேற்பு
திருப்பூர்,அக்.14-
அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி திருப்பூர் மாநகர் மாவட்டம் முழுவதும் 17-வது நாளாக தொடர்ந்து யாகங்கள், பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் ஆகியவற்றை அண்ணா தி.மு.க.வினர் நடத்தி வருகின்றனர். இதில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மேயர் அ.விசாலாட்சி,துணை மேயர் சு.குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்ணா தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி, திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சார்பில் மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் பார்க் ரோட்டில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கோவிலில் கணபதி ஹோமம்,சுதர்சன ஹோமம், நவக்கிரஹ ஹோமம், நரசிம்ம ஹோமம் ஆகியவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆனந்தன் துணைவியார் லட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் மாவட்ட மகளிர் அணி சார்பில் காலேஜ் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவிலில் மகளிர் அணி மாநில துணை செயலாளரும்,மேயருமான அ.விசாலாட்சி தலைமையில் 66 விளக்கு பூஜை மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஜெகதாம்பாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் ஆறுகோம்பை வீதியில் 25 வது வார்டு கிளை கழகம் சார்பில் 60 அடி உயர கொண்டத்து வீரப்பத்திரகாளியம்மன் சிலைக்கு 1,000 லிட்டர் பாலாபிஷேகம் செய்து,10,008 எலுமிச்சம் பழங்களாலான மாலை அணிவித்து மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன் தலைமையில் அண்ணா தி.மு.க.வினர் வழிபட்டனர்.
திருப்பூர் பல்லடம் ரோடு, அருண் சில்க்ஸ் அருகில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம் தலைமை தாங்கினார். மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர், துணை மேயர் சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் 1 மணி நேரம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
திருப்பூர் புறநகர் மாவட்டம், தெற்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.மற்றும் மங்கலம் ஊராட்சி கழகம் சார்பில் மங்கலம் பெருமாள் கோவிலில் இருந்து மலைக்கோவில் குழந்தை வேலாயுதசுவாமி கோலிவில் வரை பல்லடம் எம்.எல்.ஏ. பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், தெற்கு ஒன்றிய செயலாளர் சில்வர் வெங்கடாசலம், ஊராட்சி கழக செயலாளர் சுப்பிரமணியம் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் நடந்து சென்றனர். அங்கு
108 தேங்காய் உடைத்து ஜெயலலிதாவிற்காக 1 மணி நேரம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
திருப்பூர் மாவட்டம். உடுமலைப்பேட்டையில்புறநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் பொதுச்செயலளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி உடுமலை, பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள பூர்வீக பள்ளிவாசலில் அணிச்செயலாளர் ஏ.ஹக்கீம் எம்.சி தலைமையில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உடுமலை நகர செயலாளர் கே.ஜி.சண்முகம், நகரமன்றத்தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா, நகரமன்றத் துணைத்தலைவர் கண்ணாயிரம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தொகுதியில், பிரசித்தி பெற்ற கொழுமம் அருள்மிகு தாண்டேஸ்வரர், அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் அருள்மிகு நடராஜர் ஆகிய கோவில்களில் ஜெயலலிதா வழக்குகளிலிருந்து விடுதலையாக வேண்டி மடத்துக்குளம் தொகுதி எம்.எல்.ஏ.,சி.சண்முகவேலு தலைமையில் சென்று மண்சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பேரவைச்செயலாளர் சிவலிங்கம், ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை, அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், எஸ்.ராஜ்குமார், குமரலிங்கம் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், பேரூர்கழகச் செயலாளர் வரதராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சுப்பிரமணியம், மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் பழனிச்சாமி, துணைத் தலைவர் தண்டபாணி, கொழுமம் ஊராட்சி மன்றத் தலைவர் இந்திராணி, நீலம்பூர் செல்வராஜ், கே.கே.ரவி, கணியூர் காஜாமைதீன் உள்ளிட்ட.நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த அனைத்து நிகழ்ச்சியிலும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், ராதா கிருஷ்ணன், கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் சுப்பிரமணியம், ஸ்டீபன் ராஜ்,சதீஷ், மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார்,வளர்மதி கருணாகரன், சாகுல்ஹமீது, தாமோதரன், பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, ஒன்றிய குழுத்தலைவர் சாமிநாதன், வேலம்பாளையம் அய்யாசாமி, வி.கே.பி.மணி,ஏ.கண்ணப்பன், அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிச்சாமி, கலைமகள் கோபால்சாமி, ராஜேஷ்கண்ணா, டி.பா ர்த்திபன், ஹரிஹரசுதன், கண்ணபிரான், ரகுநாதன்,சடையப்பன், ரத்தினகுமார், பி.ராஜ்குமார், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், ராஜசேகர், பொன்னுசா மி,சரவணன், ராஜேந்திரன், ரவிக்குமார், குணசேகரன், சிவகுமார்,வேலுசாமி, கணேஷ், முருகன், கேபிள் பாலு, வினோத்குமார்,முபாரக், கு ணசேகர், விஸ்வநாதன், கவுன்சிலர்கள் முருகசாமி, செல்வம், கணேஷ், வசந்தாமணி, பிரியா சக்திவேல், பாலசுப்பிரமணியம், சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ், அமுதா வேலுமணி, பேபி தர்மலிங்கம், மற்றும் பாசறை நிர்வாகிகள் யுவராஜ் சரவணன், வி.எம்.கோகுல், லோகநாதன், பரமராஜன், சுரேந்தர், பொன்.அன்பரசன், நீ திராஜன், பங்க் என்.ரமேஷ், பேபி பழனிசாமி, என்.சரவணன், தலைமை கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன், டி.ஏ.பாலகிருஷ்ணன், தீக்கனல் விஜயகுமார், மதுரபாரதி உள்ளிட்டவர்களும் , பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், பஸ் ஸ்டாண்ட் சந்திரன், வாசுதேவன், சீனிவாசன், முன்னால் கவுன்சிலர் சு.கேசவன்,ருக்குமணி, ராஜகோபால், மகளிர் அணி நிர்வாகிகள் கோமதி சம்பத், சுந்தராம்பாள் கேசவன்,ரசூல்மும்தாஜ் உள்பட பலர் லந்து கொண்டனர்.