திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 6 ஊராட்சி ஒன்றியத்திற்கு முதல் கட்டமாக 27ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 30 ஆம் தேதி 8 ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
மணச்சநல்லூர் ஒன்றியத்தில் அதிமுக சார்பாக மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி கணவர் முருகன் மற்றும் ஏராளமான அதிமுகவினர் பல்வேறு பதவிகளுக்கு மனு தாக்கல் செய்தனர் மேலும் அதிமுக கூட்டணி கட்சியினர் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியினரும் சுயேட்சைகளும் குவிந்தனர்.
24 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 149 பேரும், 241 ஊராட்சி யூனியன் வார்டு கவுன்சிலருக்கு 1,443 பேரும்,404 கிராம ஊராட்சித் தலைவருக்கு 2,212 பேரும், 3408 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 ஆயிரத்து 582 பேரும் என நேற்று வரை 13 ஆயிரத்து 386 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.