Aug 3, 2017

திருச்சி 02.08.17ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் அதிமுக TTV தினகரன் ஆதரவாளர்கள் மனு

திருச்சி             02.08.17  

திருச்சி ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் அதிமுக TTV தினகரன் ஆதரவாளர்கள் மனு .



திருச்சி ரயில்வே ஜங்சன்  நடைமேடை (பிளாட் பார்ம்) டிக்கெட் ரூபாய் 10 லிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டதை கண்டித்தும் இந்த விலை உயர்வை ரத்து செய்ய  வலியுறுத்தியும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் அதிமுக பிரமுகர் (TTV தினகரன் ஆதரவாளர் ) ராஜராஜன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் மனு .தமிழகத்தில் மிக முக்கியமான நகரம் இது பாரம்பரியமான இரயில்வே ஸ்டேஷன். இங்கு அதிகபடியாக மிடில் கிளாஸ் மக்கள் அதிகமாக வருகின்ற இடம் வயதானவரை விடுவதற்குக்கும் மற்றும் பள்ளிக்கு குழந்தை மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ மாணவி கலைவிடுவதற்கும் அவர்களது தாய்மார்கள் வந்து பிளாட்பாரத்தில் விடுவதன் அவசியம் உள்ளதாலும் இதனை மனதில் கொன்று பிளாட்பார்ம் விலையினை குறைக்க வேண்டும்



திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக எம்பிக்கள் ப.குமார், ரத்தினவேல் மற்றும் திமுக எம்பி சிவா ஆகியோர் இப்பிரச்சனையை கண்டு கொள்ளவில்லை என  குற்றச்சாட்டு தெரிவித்தார்.

திருச்சி மாநில பொதுக்குழு கூட்டம் 30-07-17 ஞாயிறு அன்று திருச்சி ஓட்டல் அருண் கூட்ட அரங்கில் நடைபெற்ற

மாண்புமிகு. புரட்சித் தலைவர் டாக்டர்.எம் ஜி ஆர் அவர்களின் பொற்கரங்களால் தொடங்கிவைக்கப்பட்டு மாண்புமிகு டாக்டர். புரட்சித்தலைவி அம்மா  அவர்களால் அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டு இன்றுவரை விசுவாசத்துடன் ஆசிரியர் நலன்களை குறிக்கோளாக கொண்டு செயலாற்றி வரும் அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின்(அரசு அங்கீகார எண் : 149/96 )  மாநில பொதுக்குழு கூட்டம் 30-07-17 ஞாயிறு அன்று   திருச்சி   ஓட்டல் அருண் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாண்புமிகு. புரட்சித்தலைவி அம்மா வழியில் திறம்பட செயலாற்றிவரும் தமிழக அரசு ஆசிரியர்களின் உண்மையான கோரிக்கைகளை கனிவோடு பரிசீலனை செய்து நிறைவேற்றும் என்ற முழு நம்பிக்கையுடன் அரசுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்து ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கை தீர்மானங்களை பொதுக்குழுவில் நிறைவேற்றி மாண்புமிகு. தமிழக  முதலமைச்சர் அவர்களையும் மாண்புமிகு. பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களையும், கல்வித்துறை உயர் அலுவலர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கைகளை உடனடியாக  நிறைவேற்றி தர  வலியுறுத்தி கேட்டுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது



தீர்மானங்கள்
————————
1.புதிய ஓய்வூதிய(c p s)திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய பென்சன் திட்டத்ததை தொடர உத்தரவிட வேண்டும்.



2.ஆசிரியர்களுக்கான எட்டாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமுல்படுத்தவேண்டும்  

3.இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்து அதன்அடிப்படையில்ஊதியமாற்றம் செய்யப்படவேண்டும்



4.இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியான முன்னுரிமை பட்டியல் தயார் செய்து பதவிஉயர்வு மற்றும் ஊதியஉயர்வு பெற அரசாணை பிறப்பிக்க வேண்டும்




5.ஊதிய மாற்றம் அமுல்படுத்தப்படும் வரை  20 சதவீத ஊதியம் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படவேண்டும் என  கல்வித்துறை உயர் அலுவலர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கைகளை உடனடியாக  நிறைவேற்றி தர  வலியுறுத்தி கேட்டுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது