May 8, 2020

திருச்சி 390 பெயருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்

திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 
390 துப்புரவுப் பணியாளர்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் 
மொத்தம் 487500 மதிப்பிலான பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு
அவர்கள் இன்று(08.05.2020) வழங்கினார். 

 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துப்புரவுப் பணியாளர்களுக்கு அத்தியாவசிய 
மளிகைப்பொருட்களை வழங்கி தெரிவித்ததாவது:

 திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்தடுப்பு பணி முன்னெச்சரிக்கை 
தொடர்பாக மருத்துவத்துறை ஊரக வளர்ச்சித்துறை காவல்துறை மாவட்ட நிர்வாகம் ஆகிய துறை 
அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றுவதனால் நோய்தொற்று அதிகஅளவில் பரவாமல்
தடுக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்ட 51 நபர்கள் 
முழுமையாக குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படடுள்ளனர். மருத்துவர்கள் செவிலியர்கள்
துப்புரவுப்பணியாளர்கள் ஒருங்கிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். தற்போது 
திருச்சி மாவட்டத்தை சார்ந்த 11 நபர்கள் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த 9 நபர்களும் பெரம்பலூர்
மாவட்டத்தைச்சார்ந்த 13 நபர்களுக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தைச்சார்ந்த 2 நபரும் கரூர்
மாவட்டத்தினை சார்ந்த 1 நபரும் ஆக கூடுதல் 36 நபர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். அனைத்து 
நபர்களும் நலமுடன் உள்ளனர். மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சை முறையால் நோய் தொற்று 
ஏற்பட்டுள்ளவர்கள் முழுமையாக குணமடைந்துள்ளனர். தமிழக அரசு சார்பாகவும் மாவட்ட 
நிர்வாகத்தின் சார்பாகவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் 
கொள்கிறேன்
 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் 390 
பணியாளர்களுக்கு 20 நாட்களுக்கு தேவையான தலா 10 கிலோ அரிசி 1கிலோ துவரம் பருப்பு
1கிலோ பச்சைப்பயிறு 1 கிலோ உளுந்தம் பருப்பு1 கிலோ பாசிப்பருப்பு 1கிலோ கோதுமை மாவு1 
கிலோ சர்க்கரை போன்ற ரூ.1250 மதிப்பீட்டில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை 390 
துப்புரவு பணியாளர்களுக்கு மொத்தம்  487500 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அத்தியாவசிய பொருட்கள் ஊரக வளர்ச்சி பொறியியல் துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. 
 பொதுமக்கள் அனைவரும் வெளியில் செல்லும் போது முககவசம் அணிய வேண்டும் கைகளை 
கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் சேர்ப்பு கொண்டு கைகளை கழுவவேண்டும்
சமூகஇடைவெளியை கடைபிடிக்க வேண்டும் இவ்வாறு கடைபிடித்தால் நோய் தொற்றில் இருந்து 
நம்மைநாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்
தெரிவித்துள்ளார் 
 இதனை தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா வைரஸ் நோய்பரிசோதனை 
செய்யும் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று(08.05.2020) 
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
 இந்நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.அனிதா இணை இயக்குநர்
(மருத்துவம்மற்றும் ஊரகநலப்பணி) டாக்டர்.லெட்சுமி துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) 
டாக்டர்.சுப்ரமணி மருந்து கண்காணிப்பாளர் டாக்டர்.ஏகநாதன் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நகர்நல 
அலுவலர் ஜெகநாதன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர் ஊரக 
வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ் ஊரக வளர்ச்சி பொறியியல்துறை
உதவிப பொறியாளர் வடமலைக்குமார் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உடன் உள்ளனர்.

திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

திருச்சி 

திருச்சியில் 
மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். 

கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், படிப்படியாக ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதனால் ஏழை மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கே கஷ்டப்பட்ட சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து தமிழக அரசு சார்பிலும், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தாங்களாக முன்வந்து நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்த வகையில் திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
அவரது கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு வாரியாக  நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். 

  • இதன் ஒரு பகுதியாக இன்று பொது மக்களுக்கு

மளிகைப் பொருட்கள்  வழங்கினார்.