வார்டு பகுதி மக்களுக்கு கரும்புச் சாறு எடுத்து கண்ணாடி குடுவையில் கொடுத்து பிரச்சாரம் செய்த 53 வது வார்டு அதிமுக வேட்பாளர் கற்பகவள்ளி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 53 வது வார்டு அதிமுக சார்பில் எம்ஜிஆர் இளைஞர் அணி நகர செயலாளர் ஜி.ஆர்.சிவா அவர்களின் மனைவி கற்பகவள்ளி போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தொடர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த கற்பகவள்ளி இன்று 53வது வார்டுக்குட்பட்ட வில்லியம்ஸ் ரோடு, புது தெரு, முடுக்கு தெரு, சோனா மீனா சாலை ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள கரும்புச்சாறு கடைக்கு சென்று அங்கு வரும் வார்டு மக்களுக்கு கரும்பு சாறு கொடுத்து வித்தியாசமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிப்பின் போது எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நகர செயலாளர் ஜி.ஆர்.சிவா, வட்ட செயலாளர் ஒத்தகடை மஹேந்திரன், எஸ்.எம்.டி.மணிகண்டன், தாரணி, நாகலட்சுமி, லஜபதி, ராஜகணபதி, யாசர் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.