Mar 17, 2015

திருச்சிராப்பள்ளி ஜங்சன் மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு



திருச்சிராப்பள்ளி மாவட்டம்ää ஜங்சன் மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிääஇன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சிராப்பள்ளி ரயில்வே சந்திப்பு அருகில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலாம் அணி முகாம் சாலையில் உள்ள பழமையான மற்றும் குறுகலான ரயில்வே பாலத்திற்குப் பதிலாக திருச்சிராப்பள்ளி சந்திப்பு மற்றும் பூங்குடி ரயில் நிலையங்களுக்கு இடையில் 6 வழி தட அகலமுள்ள சாலை மேம்பாலமும்ää ரூ.81.40 கோடி மதிப்பில் இரண்டு கட்டங்களாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் முதல்கட்டமாக ரூ. 52.52 கோடி மதிப்பில்  சாலை மேம்பாலம் ரயில்வே பாதைக்கு மேல் தற்போதுள்ள குறுகிய மேம்பாலத்திற்கு அருகில் சென்னை - திண்டுக்கல் சாலைää திருச்சிராப்பள்ளி-மதுரை சாலை மற்றும் மத்திய பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் மூன்று வழித்தட அகலத்துடன் அரிஸ்டோ ரவுண்டானா உள்ள இடத்தில் உயர்மட்ட சுற்றுப்பாலமாக இரண்டு அடுக்கு போக்குவரத்து வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை வருகின்ற பிப்ரவரி 2017க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திண்டுக்கல்- அரிஸ்டோ மத்திய பேருந்து நிலையம் மற்றும் திண்டுக்கல் - அரிஸ்டோ திருச்சி ரயில்வே சந்திப்பு ஆகியவற்றை இணைக்கும் பாலப்பகுதியினை ஓராண்டு காலத்திற்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.  


முதல்கட்டப்பணிகள் முடிவடைந்தவுடன் போக்குவரத்தினை முதல்கட்ட புதிய பாலத்தில் அனுமதித்து பின்னர் தற்போதுள்ள பழைய பாலத்தினை அகற்றி அந்த இடத்தில் இரண்டாம் கட்டமாக 3 வழித்தட சாலை மேம்பாலம் கட்டப்பட உள்ளது.

இப்பாலக் கட்டுமானப்  பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் பாலப்பணிகளுக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள்ää குடிநீர் குழாய்கள் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகளை உடனடியாக மாற்றி அமைத்து பால கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட துறை தலைமை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும்ää சேவை சாலைகள் அமைத்திட நில ஆர்ஜிதம் செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்ää  ரயில்வே குடியிருப்புகள்ää மண்டல பயிற்சிபள்ளிää மனமகிழ் மன்றம்ää ரயில்வே கூட்டுறவு பண்டகசாலை உள்ளிட்ட ரயில்வே இடங்களிலும்ää  தொலைதொடர்பு துறை இடம்ää  ராணுவ இடம் ஆகியவற்றில் சேவைச்சாலை அமைத்திடவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்றார்.

மேலும்ää மன்னார்புரம் சாலை மற்றும் கிராப்பட்டி சாலை ஆகிய இடங்களில் பால வேலைகளைத் தொடங்க சிறப்புக் காவல் படை நிலத்தில் நான்குவழிச் சாலையினை அமைத்து பின்னர் பாலப்பணியினை தொடங்க தமிழக உள்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் ஆகியோர் தடையின்மைச் சான்றினை வழங்கி உள்ளார்கள். இவ்விடத்தினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சாலைப் பணிகளை மேற்கொள்ள வருகின்ற இரண்டு நாட்களுக்குள் உள்நுழைவு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் தர்ப்பகராஜ்ää மாநகராட்சி ஆணையர் விஜயலெட்சுமிää நகரப்பொறியாளர் சந்திரன்ää நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் பூங்கொடிää உதவிப்பொறியாளர்கள் முத்துகுமார்ää .நர்மதாää கோட்டாட்சியர் கணேசசேகரன்ää மின்சாரவாரிய செயற்பொறியாளர் ராஜேந்திர விஜய்ää உதவி செயற்பொறியாளர் .டி.சேகர்ää உதவிப்பொறியாளர்  சதீஸ்குமார்ää மாநகராட்சி செயற்பொறியாளர் பாலகுருநாதன்ää செயற்பொறியாளர் நாகேஸ் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிää தொடங்கி வைத்து கலந்து கொண்டார்


திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் அருகில் உள்ள தென்னக ரயில்வே மேலாளர் அலுவலகம் அருகிலிருந்து தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி கொடியசைத்து இன்று (17.03.2015) தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.

தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் 16.03.2015 முதல் வருகின்ற 22.03.2015 வரை ஒரு வார காலம் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.  பொதுமக்கள் தங்கள் பருகும் நீரின் தன்மையை உணரவும்ää தரமற்ற குடிநீரினால் பரவக்கூடிய நோய்கள் பற்றி தெரிந்து கொள்வதற்காகவே இவ்வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதில்ää முதல் நாள் அன்று மாவட்ட அளவில் விழிப்புணர்வு பேரணிகளும்ää 2ம் நாள் ஒன்றிய அளவில் பேரணிகளும்ää 3ம் நாள் ஊராட்சிää நகராட்சிää பேரூராட்சி அளவில் விழிப்புணர்வு கூட்டங்களும்ää 4ää 5ää 6 மற்றும் 7ம் நாட்களில் நீர் மாதிரி சேகரிப்பு பரிசோதனையும் நடத்தப்படுகிறது. 

இன்று நடைபெற்ற பேரணியில் விளையாட்டு விடுதி மாணவää மாணவிகள்ää மகளிர் சுயஉதவிக்குழுவினர்ää ஜமால் முகமதுää செயின்ட் ஜோசப்ää உருமு தனலெட்சுமி கல்லூரிää இந்திராகாந்தி கல்லூரி ஆகியவற்றில் பயிலும் 600க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.  இப்பேரணி ரயில்வே சந்திப்பில் தொடங்கி கோ-ஆப்டெக்ஸ்ää  மத்திய பேருந்து நிலையம் வழியாக வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்தது. 

இப்பேரணியில் நகரப் பொறியாளர் சந்திரன்ää குடிநீர் வடிகால்வாரிய கண்காணிப்புப் பொறியாளர் என்.சந்திரசேகரன்ää நிர்வாகப் பொறியாளர் குமார்ää மாநகராட்சி செயற்பொறியாளர் பாலகுருநாதன்ää செயற்பொறியாளர் நாகே~; உட்பட பலர் கலந்து கொண்டனர்.