திருச்சி 14.03.18.
மாவட்ட அளவிலான தொழிற் முனைவோர் விழிப்புணர்வு முகாம்.
மாவட்ட அளவிலான தொழிற் முனைவோர் விழிப்புணர்வு முகாம் திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் நடைப்பெற்றது.இதில் கலந்து கொண்ட திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசா மணி பேசிய போது தமிழக அரசு புதிதாக அமைத்திடும் தொழில்களை ஊக்கப்படுத்தவும் அதன் மூலம் வேலை வாய்ப்பினை பெருக்கிடவும் மானியத்துடன் கூடிய திட்டங்களை செயல்படுத்துவதாகவும். திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பின் தங்கிய வட்டாரங்களிலும் புதியதாக தொழிலகங்கள் அமைக்கப்பட்டு அதிக பட்சம் ரூ.30 இலட்சம் மூலதன மான்யமாக வழங்கப்பட்டு வருவதாகவும்,புதியதாக அமைக்கப்பட உள்ள தொழிலங்களுக்கு மின் மான்யம், ஜி.எஸ்.டி வரி மான்யம், ஜெனரேட்டர் மான்யம் வழங்கப்படுவதாகவும், மேலும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சுயமாக தொழில் அமைத்திட ரூ.10 இலட்சம் வரை வங்கி கடனுதவியும் மான்யமாக 1.25 இலட்சம் அரசு வழங்குகிறது. தமிழக அரசு பட்டம் மற்றும் பட்டயம் படித்துள்ள இளைஞர்களுக்கு ஏற்ற தொழில்களை ஒரு கோடி ரூபாய் வரையிலான மதிப்பீட்டில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறனர். இத்திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் மான்யம் வழங்கபட்டு கடனுக்கான வட்டி விகிதத்தில் மூன்று விழக்காடு மான்யமும் வழங்கப்படுகிறது. இதில் திருச்சி மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்க 10 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் விரைவில் தொழிற் வளர்ச்சிடையும் எனவும்
இந்தியன் வங்கி சார்பாக தொழிற் செய்ய 80 ஆட்டோக்கள் வழங்கப்படுகிறது. மேலும் மணப்பாறையில் 1000 ஏக்கர் இடம் ஒதுக்கி தொழிற்பேட்டை அமைய உள்ளதாகவும் கூறினார். புதிதாக தொழிற்முனைவோர்கள் இந்த திட்டங்களின் கீழ் பயன் பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திட முன்வருமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டு கொண்டார்.