Nov 17, 2014

மக்களின் முதலவர் மாண்புமிகு அம்மா அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன

மக்களின் முதலவர் மாண்புமிகு அம்மா அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டி மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவிலில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் காலை 7.45 மணி முதல் 12.30 மணி வரை மகா யாகம் நடைபெற்றது .ஜெயதுர்கை அம்மனுக்கு 108 சுமங்கலிகள் கலந்து கொள்ளும் பூஜை நடைபெற்றது .108 கோ பூஜை ,ஸ்ரீ கஜ பூஜை ,ஸ்ரீ அச்வ (குதிரை) பூஜை மற்றும் 108 சிவசாரியர்கள் பங்கேற்று 9 லட்சம் ஆவர்த்தி ஜவம்,9 ஆயிரம் ஆவர்த்தி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன .இந் நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அமைச்சரின் துணைவியார் ஜெயந்தி செல்லூர் ராஜு உள்ளிட்ட ஏராளமான கழக தொண்டர்கள் பங்கேற்றனர் ..

திருப்பூரில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் ரூ.3.52 கோடிக்கு நலத்திட்டங்களை அமைச்சர் ஆனந்தன் வழங்கினர்

திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மீயர் விசாலாட்சி ஆகியோர் வழங்கினார்.  
திருப்பூர் மாவட்ட கூட்டுறவுத்துறையின் சார்பில், 61-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா பல்லடம் ரோடு,லட்சுமி திருமண மண்டப கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் கூட்டுறவு கொடியை ஏற்றி வைத்தார். கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்  ஆர்.ஏ.சக்திவேல் வரவேற்று பேசினார். திருப்பூர் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சா.பாபு திட்ட விளக்க உரை ஆற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
கூட்டுறவே நாட்டுயர்வு என்ற அடிப்படையில்,  மூன்றரை ஆண்டுகளுக்கு முன் ஆட்சிப்பொறுப்பேற்ற ஜெயலலிதா தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இன்றைக்கு அந்த திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. நிதிப்பற்றாக்குறை இருந்தாலும் திட்டங்கள் தொடர்கின்றன. இன்றைக்கு தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் தேர்தல் நடத்தில் அதற்கு தலைவர், இயக்குனர்களை நியமித்து சங்கங்களின் செயல்பாடுகளை அதிகரித்துள்ளார்.விவசாயத்துக்கான அனைத்து முன்னேற்ற நடவடிக்கைகளையும் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுத்துகிறது.
கடந்த ஆண்டில் ரூ.4 கோடிக்கும் அதிகமாக பருத்தியும் 2 கோடி ரூபாய்க்கும்  அதிகமாக இதர விளை பொருட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு கடனுதவிகள் செயல்பட்டு கொண்டிருக்க காரணம் இந்த துறையை சிறப்பாக மேம்படுத்தி செயல்படுத்தி கொண்டிருக்கிறதென்றால் அதற்கு காரணம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இன்று ஒரு நாள் மட்டும் 591 பயனாளிகளுக்கு 3.53 கோடி ரூபாய் மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது.கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கூட்டுறவு காய்கறி அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக அம்மா மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் 5 அம்மா காய்கறி அங்காடிகள் துவக்க ஜெயலலிதா அனுமதி அளித்துள்ளார்.வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயன்பெற்று கொண்டிருக்கின்றன.திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த விழாவில் வட்டியில்லா கடனாக மாற்றுத் திறனாளிகள் 343 பேருக்கு ரூ. 2 கோடி வழங்கப்பட்டுள்ளது. நலிவுற்ற சங்கங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.183 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலமாக 2,015 உறுப்பினர்களுக்கு பயிர்க்கடனாக ரூ. 135.85 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 125 சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ. 6.80 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. மத்திய காலக் கடனாக 259 பேருக்கு ரூ. 22.87 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் ரூ. 4 கோடி மதிப்புக்கு பருத்தியும் ரூ. 2 கோடி மதிப்புக்கு இதர விளை பொருள்களும் கூட்டுறவு சங்கங்களால் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவில் மட்டும் 591 பயனாளிகளுக்கு ரூ. 3.53 கோடி மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் விலையில்லாமல் 20 கிலோ அரிசி, கூட்டுறவு காய்கறி அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அம்மா மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே இந்த திட்டத்தை ஜெயலலிதா ஒருவர்தான் சிறப்பாக செயல்படுத்தி உள்ளார்.இன்றைக்கு தமிழகத்தில் உள்ள சுய உதவி குழுக்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயன்பெற்று கொண்டிருக்கின்றன. 
இன்றைக்கு திருப்பூர் மாவட்டத்தில் 183 தொடக்க வேளாண்மை கூட்டுறவு  வங்கிகளும்,3 நகர கூட்டுறவு வங்கிகளும் உள்பட மொத்தம் 226 கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கு முழு காரணம் மக்கள் முதல்வர் ஜெயலலிதாதான்.
 இன்றைக்கு வட்டியில்லா கடனாக மாற்றுத்திரனாளிகள் 343 பேருக்கு 2 கோடி ரூபாய்க்கு மேலாக வழங்கப்பட்டுள்ளது. நலிவுற்ற சங்கங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பாதுகாப்பு வசதிக்காக 5 சங்கங்களில் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது. 
 நமது மாவட்டத்தில், 183 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலமாக 2015 உறுப்பினர்களுக்கு பயிர்க்கடனாக 135.85 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 125 சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு 6.80 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. மத்திய காலக்கடனாக 259 பேருக்கு 22.87 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 
 திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமையுரையில், பொதுவாக கூட்டுறவு சங்கம் என்றால் ரேசன் கடை என்று மட்டும் தான் நினைத்திருந்தார்கள்.தற்போதைய அரசு சங்கங்களுக்கு நிறைய நிதி அளித்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டில் 240 சங்கங்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் 20018 நபர்களுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நகர கூட்டுறவு வங்கி மூலம் பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி முன்னிலையுரையில்  உலகம் இன்று தொழில்நுட்பத்தில் வளர்ந்து விட்டது.கூட்டுறவு துறையின்  இது போன்ற விழாக்கள் மூலம், நமது  ஒற்றுமை,மரபு, மாண்புகள் காப்பாற்றப்படுகின்றன.தனிமரம் என்றைக்கும் தோப்பாகாது; கூடி செய்தால் தான் எதையும் செய்ய முடியும். மக்கள் முதல்வர் ஜெயலலிதா கூட்டுறவாக செயல்பட வேண்டும் என்று தான் கூறி இருக்கிறார். கூட்டுறவு உலகத்தின் வளர்ச்சிக்கு அச்சாணி. எனவே, ஜெயலலிதாவிற்கு நீங்கள் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.
விழாவில் அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி எம்.,பி.சி.மகேந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் மடத்துக்குளம் சி.சண்முகவேலு, காங்கயம் என்.எஸ்.என்.நடராசன், பல்லடம் பரமசிவம், தாராபுரம் பொன்னுசாமி,அவினாசி கருப்பசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 
மேலும் பொங்கலூர் ஒன்றிய பெருந்தலைவர் சிவச்சலம், ஊராட்சி தலைவர்கள் கரைபுதூர் நடராஜன், யு.எஸ்.பழனிசாமி மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், கவுன்சிலர்கள் கே.பி.சண்முகம், கூட்டுறவு சங்க தலைவர்கள் கருணாகரன், மார்க்கெட் சக்திவேல், சித்துராஜ், ராமமூர்த்தி, ஈஸ்வரமூர்த்தி,கோகுல், துத்தேரிபாளையம் நாகராஜ், எஸ்.எஸ்.மணியன் மற்றும் கருவம்பாளையம் மணி, ருக்மணி, அரசு வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், வளர்மதி சாகுல் ஹமீது, தாமோதரன், நீதிராஜன்,ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக 61வது கூட்டுறவு வார விழாவினை யொட்டி திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சா.பாபு, மண்டல அலுவலகத்தில் கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்தும், அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் கூட்டுறவு விற்பனை சங்கங்களின் மேலாண்மை இயக்குனர் மற்றும் துணை பதிவாளர் ரவீந்திரன், துணை பதிவாளர்கள் கிருஷ்ணமூர்த்தி (திருப்பூர் சரகம்),  சண்முகவேலு (பொது விநியோக திட்டம்), கூட்டுறவு சார் பதிவாளர் ((பொது விநியோக திட்டம்) ஜெயராமன், அலுவலர்கள் ராமகிருஷ்ணன், பிரைம் நாத், கேசவன் (கோவை கூட்டுறவு ஒன்றியம்) மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் திருப்பூர் வடக்கு தொகுதி மேற்குப்பதி அசோகபுரத்தில்

வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிறுத்த நிழற்குடையை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர் வடிவேல், கூட்டுறவு சங்க தலைவர்கள் வெ.அய்யாசாமி, ஜெகநாதன் உளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் வடக்கு தொகுதி, மேற்குப்பதி அசோகபுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் திருக்கோவிலில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வேண்டி



மாநகர் மாவட்ட செயலாளரும்,வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், தொகுதி செயலாளர் ஜெ.ஆர். ஜான், ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.எம்.பழனிசாமி, பூலுவபட்டி பாலு, மாவட்ட நிர்வாகிகள் வி.ராதாகிருஷ்ணன், அன்பகம் திருப்பதி, மணி, கோகுல், கண்ணன், நீதிராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் கிருத்திகா ரத்தினசாமி, சிதம்பரம், பானு பழனிசாமி, குமாரசாமி ஆகியோர் உள்பட் பலர் கலந்து கொண்டனர்.