Oct 3, 2014

புதுச்சேரியில் நாளை முழு அடைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி புதுச்சேரியில் நாளை (சனிக்கிழமை) காலை முதல் மாலை வரை 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
.

இது தொடர்பாக புதுச்சேரி அதிமுகவின் நகர்புற செயலாளர் டி. ரவீந்திரன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இந்த பந்த் போராட்டம் தொடர்பாக கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றார்.

அவர் மேலும் கூறுகையில், எங்கள் தலைவி மிக விரைவிலேயே சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் அதற்காக புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் பந்த் நடைபெறும் என்றார். இந்த பேட்டியின் போது அதிமுக சட்டமன்ற கட்சியின் துணைத் தலைவர் அன்பழகன், எம்எல்ஏக்கள் ஓம்சக்தி சேகர், எல். பெரியசாமி, ஏ. பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.