திருச்சி
25.2.16
திருச்சியில் வெல்லமண்டி சண்முகம் தலைமையில் 68
வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு
1000பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அஇஅதிமுக கழக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் கீழப்புதூர் ரோடு எடத்தெருவில் நடைபெற்றது
அதில் பேசிய தலைமை கொறாடா மனோகரன் முதல்வர் நமது அம்மா திருச்சியை பொறுத்தவரை பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி கிரைண்டர்äமின்விசிறிகள் விலையில்லா ஆடுகள் விலையில்லா மாடுகள் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு நலத்தி;ட்டங்களை செய்துள்ளார். எனவே இப்படி தமிழக மக்களுக்காக பாடுபடும் அம்மா அவர்களுக்கு வருகின்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். மீண்டும் அம்மாவின் ஆட்சி மலர வேண்டும் இவ்வாறு என தலைமை கொறடா மனோகரன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நிர்மலா பெரியசாமி தலைமைகழக பேச்சாளர் சிறப்புரையாற்றினார் ஸ்ரீரங்க சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்ஜோதி மேயர் ஜெயா துணை மேயர் ஸ்ரீனிவாசன் மற்றும் அவைத்தலைவர் வெல்லமண்;டி நடராஜன் முன்னாள் அமைச்சர்கள்; மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்;