திருப்பூர் மாநகர்மாவட்ட அ.தி.மு.க., அமைப்பு தேர்தல் மனுக்கள் பரிசீலனை நேற்று (ஞாயிறு) நடந்தது. கட்சியினர் அளித்த மனுக்களை கைத்தறி துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா , வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் பரிசீலனை செய்தனர். திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி,அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி, துணை மேயர் சு.குணசேகரன், ஆகியோர் உடன் இருந்தனர்.