- திருச்சி
அரசு தடையை மீறி அனுமதியின்றி நடத்தப்பட்ட மசாஜ் சென்டர் க்கு சீல்
தமிழகத்தில் தொற்று பரவாமல் இருக்க மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன அதன் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது இதில் அத்தியாவசிய பொருட்களான மளிகை பால் போன்ற பொருட்களுக்கு கால அவகாசம் கொடுத்து கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது மத்திய அரசு மாநில அரசு அறிவிப்பை எதிர்த்து திருச்சி உறையூர் ஹவுசிங் போர்டில் ஒரு வீட்டில் கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் என்னும் பெயரில் போலியான மசாஜ் சென்டர் இயங்கி வந்தது
144 தடை உத்தரவை மீறி நடைபெற்றது நடைபெற்ற மசாஜ் சென்டரில் மசாஜ் செய்வதாகவும் அரசு முறையான அனுமதி பெறாமல் மசாஜ் சென்டர் நடத்தி வருவதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் திருச்சி சித்த தலைமை மருத்துவர் காமராஜ் ஆய்வு செய்தார் ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது மசாஜ் சென்டரில் வேலை பார்க்கும் பெண்கள் மேனேஜர் பின் வழியாக தப்பி ஓடிவிட்டனர் பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தாசில்தார் முன்னிலையில் மசாஜ் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது
தப்பி ஓடிய நபர்களை மற்றும் அதன் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்